Tuesday, April 16, 2013

சொன்னாலும் சொல்வார் சோலார் ஸ்டார்!!

A.R. ரஹ்மானுக்கு தன் படத்தில் இசை அமைக்கும் தகுதி இல்லை என சோலார் ஸ்டார் ராஜகுமாரன் சொன்னதாக படித்தேன். பவர் ஸ்டார், தன்னை தானே பெருமை பேசி பெற்ற விளம்பரத்தை இவர் அடுத்தவர்களை குறை கூறி பெற்று விட முயல்வதாக தெரிகிறது. இப்படியே போனால் இவர் என்னவெல்லாம் பேசுவார் என ஒரு கற்பனை பேட்டி .



திருமதி.தமிழ் எப்படி வந்துள்ளது ?

என்னுடைய முந்தைய படங்கள் போலவே அற்புதமாக வந்துள்ளது ஆனால் படத்தை இந்த உலகத்தில் உள்ள ரசிகர்கள் புரிந்து கொள்வது கடினம் . இந்த படம் வேற்றுகிரகவாசிகளுக்கானது.

ஷங்கரின்  படத்தில் வாய்ப்பு கிடைத்தால்  நடிப்பீர்களா? 

எனக்கு தகுந்தவாறு படம் செய்ய ஷங்கரால் முடியாது. என் ரசிகர்களின் எதிர் பார்ப்பை  ஷங்கரால் ஒரு போதும் நிறைவேற்ற முடியாது. எனவே ஷங்கருக்கு வாய்ப்பளிக்க மாட்டேன்.

அஞ்சலி , அனுஷ்கா யார் சிறந்த நடிகை ?

தேவயானி 

நடிப்பில் உங்களின் ரோல் மாடல்?

இதிலென்ன சந்தேகம். ராமராஜன்தான்.

பவர் ஸ்டார்  உங்களுக்கு போட்டியா?

தமிழகத்தில் இப்போது  பவர் இருப்பதே இல்லை. மேலும் சோலார் பேனலில் இருந்து பவர் எடுக்கலாம் ஆனால் ஒரு போதும் பவரில் இருந்து சோலார் பேனல் எடுக்க முடியாது. எனவே பவர் ஸ்டார் எனக்கு போட்டியில்லை.

கமலஹாசன் போல ஹாலிவுட் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால்?

நிச்சயம் போக மாட்டேன். ஹாலிவுட்காரர்கள் விரும்பினால் என் படங்களை டப்பிங் செய்து கொள்ளலாம்.

A.R. ரஹ்மான் கிட்ட இல்லாதது அப்பிடி என்ன S.A. ராஜ்குமார் கிட்ட இருக்கு?

லலல... லாலாலலா....லல்லல்லா...


2 comments:

  1. ஹா...ஹா...பவுடர் ஸ்டார் அப்படின்னு சொல்றாங்க...இவர

    ReplyDelete
  2. பவுடர் ஸ்டார் மக்கள் அவருக்கு கொடுத்த பட்டம். சோலார் ஸ்டார் அவருக்கு அவரே கொடுத்து கொண்ட பட்டம் .

    ReplyDelete