IPL வந்தாலே நாட்டில் அனைவருக்கும் கிரிக்கெட் ஆர்வம் எங்கிருந்தோ பீறிட்டு கொண்டு வந்து விடுகிறது. இந்திய அணி விளையாடும் போட்டியை கூட பார்க்காதவர்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள ஒரு ஊரின் பேரில் விளையாடும் அணியை தங்கள் அணியாக எண்ணி கொண்டு டிவியின் முன் ஒன்றி விடுகிறார்கள்.
மக்கள் தங்கள் மாநிலத்தின் மேல் கொண்ட பற்றுதான் IPLலின் வெற்றிக்கு காரணமா? நிச்சயம் இல்லை. ஏனெனில் ரஞ்சி கோப்பையில் 11 வீரர்களும் ஒரே மாநிலத்தில் இருந்து விளையாடுகிறார்கள். ஆனால் IPLலில் நான்கு வெளிநாட்டு வீரர்கள், 4 வேற்று மாநில வீரர்கள் விளையாடுகிறார்கள். இருந்தும் IPL மேல் காட்டும் ஆர்வத்தில் ஒரு சதவீதம் கூட யாரும் ரஞ்சி கோப்பையில் காட்டுவதில்லை.
IPL மேல் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்துக்கு காரணம்தான் என்ன? அது ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை. IPL போட்டிகள் கிட்டத்தட்ட ஒரு சினிமா போல தயாரிக்கப்படுகிறது. ஆக்சன், செண்டிமெண்ட், கவர்ச்சி என அனைத்தும் கலந்து தயாரிக்கப்படும் ஒரு படத்தை மக்கள் விரும்புவது மிகவும் இயல்பே. அந்த படத்தின் ஒரு சில காட்சிகள் கீழே கொடுத்துள்ளேன்.
கிளாமர்
ஆக்சன்
ஆக்சன் காட்சிகள் இல்லாத மசாலா படமா? எல்லா வகையான ஆக்சனும் உண்டு இந்த படத்தில்.
செண்டிமெண்ட்
ஸ்ரீசாந்த்தின் அழுகையை பார்த்து பரிதாபப்பட்டவர்களும் உண்டு. ப்ரீதி ஜிந்தா, ஷில்பா ஷெட்டியின் கண்ணோரம் வழியும் ஒரு துளி கண்ணீரை பார்த்து உள்ளம் உடைந்தவர்களும் உண்டு. நம்ம ஆளுங்களுக்கு செண்டிமெண்டும் வேணும்ல.
ப்ரீதி ஜிந்தா வெற்றி பெற்றதும் தம் அணி வீரர்களை கட்டி பிடிப்பதும் உணர்ச்சிபூர்வமான காட்சிதான். இங்கே அவருக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து தோற்ற அணியினரையும் கட்டி பிடித்து தோற்ற உள்ளங்களுக்கு ஒரு சிறிய மன நிம்மதி தாருங்கள் ப்ளீஸ்.
ரொமான்ஸ்
காதல் ஜோடிகளின் முத்த காட்சிகள் பார்ப்பவர்களை பரவசம் அடைய வைக்கும். வீரர்களின் காதலிகளும், மனைவிகளும் மைதானத்துக்குள் இருக்கும் தம் காதலர்களுக்கு கண்களாலேயே தம் காதலை தெரிவிப்பார்கள்.
காமெடி
IPL சினிமாவில் காமெடி கொஞ்சம் கம்மிதான். ஆனால் சில நேரங்களில் நடக்கும் காமெடிகள் ரசிகர்களை எளிதாக கவர்ந்து விடும். ஒரு முறை முரளி விஜய் கேட்ச் பிடித்து விட்டு ஆனந்தத்தில் மைதானம் முழுவதும் சுற்றி ஓடினார். அவர் தன்னிலைக்கு வந்து அம்பயரை பார்த்ததும் அவர் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே. இந்த முறை கோஹ்லிக்கு நடந்ததும் இதேதான்.
ட்விஸ்ட்
அனைத்துக்கும் மேல் பரபரப்பான ட்விஸ்ட்களும் , எதிர்பாராத முடிவுகளும் IPLலின் மிக பெரிய பலம். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாராலேயும் கணித்துவிட முடியாது. அதிர்ச்சி தரும் முடிவுகளும் இதில் அடக்கம்.
இப்படி எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் உங்களுக்கும் IPL ஒரு மசாலா படமாக தெரிகிறதுதானே? IPLலின் வெற்றிக்கு இவையே காரணம்.
நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான் மசாலா படம் தான் நமக்கும் பிடிக்கும்
ReplyDeleteஆனால் திரைக்கதை எழுதி வைத்து கிரிக்கெட் ஆடுவது சரி இல்லைதானே :)
Delete