தமிழில் பேய் படங்கள் வருவது இப்போது மிகவும் குறைந்து விட்டது. 13ம் நம்பர் வீடு,
உருவம் போன்ற மாதிரியான படங்களை தமிழில் இப்போது
யாரும் எடுக்காமல் தமிழ் பேய் பட ரசிகர்கள் ஹாலிவுட் படங்களை பார்த்து சந்தோசப்பட்டு
கொள்ள வேண்டிய நிலை. காமெடி படங்கள் மட்டும்தான் ஓடும் என்றால் யார்தான் பேய் படம் எடுப்பார்கள். அபூர்வமாக அவ்வப்போது ‘காஞ்சனா’
போன்ற படங்கள் வெளிவந்தாலும் ஓட்டு மொத்தமாக வெளி வரும் பேய் படங்களின் எண்ணிக்கை
மிகவும் குறைவு. இந்த சூழ்நிலையில் காமெடியையும், பயத்தையும் கலந்து கொடுத்து
காட்சிக்கு காட்சி ரசிகர்களுக்கு புது அனுபவம் குடுக்கும் படமாக வந்துள்ளது ‘யாமிருக்க
பயமே’
கதாநாயகனுக்கு எதிர்பாராத வகையில் பங்களா ஒன்று கிடைக்கிறது. அவர்
அந்த பங்களாவுக்கு குடி புகுந்ததும் நடக்கும்
சம்பவங்களை நிறைய காமெடி, கொஞ்சம் பயம், கொஞ்சம் சஸ்பென்ஸ், கொஞ்சம் கவர்ச்சி என்று சரியான விகிதத்தில் கலந்து கொடுத்து
இருக்கிறார்கள். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை திரையரங்கில் அனைவரும்
சிரித்து கொண்டே இருக்கிறார்கள். டைட்டிலில் இருந்து படம் முடியும் வரை எல்லாமே
புதிதாக இருக்கிறது (குறைந்தபட்சம் தமிழ் படம் மட்டும் பார்ப்பவர்களுக்கு)
கதையில் குறைகளே இல்லையா என்று கேட்டால் நிறைய சொல்லலாம்தான். ஆனால் காமெடி
படத்திலும், பேய் படத்திலும் லாஜிக் எதற்கு பார்க்க வேண்டும். கொடுத்த காசுக்கு படம் திருப்தியாக இருக்கிறது
அவ்வளவுதான். இரட்டை அர்த்த வசனங்களை கொஞ்சம் குறைத்து கொண்டிருந்தால்
குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்று சொல்லி விடலாம். இப்போதைக்கு இது பார்க்க வேண்டிய படம் என்று மட்டும்
சொல்லிக் கொள்கிறேன்.
இரவு 1 மணிக்கு நண்பர்களோடு ரொம்ப சந்தோஷமா (கொஞ்சம் பயத்தோடு) பார்த்த படம்.அடுத்த நாள் வேலைக்கு போய் தூங்குனது வேறு விஷயம்
ReplyDelete