உலகப்படம்(universal movie) பற்றி பலர் சொல்லியும் எழுதியும் கேட்டு
இருக்கிறேன். பொதுவாக உலகப்படம் என்பது கலாச்சார வேறுபாடுகளை தாண்டி உலகத்தில் உள்ள அனைத்து மக்களாலும் ரசிக்கப்படக்
கூடிய படம் அல்லது உலக மக்கள் அனைவராலும்
ஏற்று கொள்ளப்படக் கூடிய பொதுவான
கருத்துகளை கொண்டிருக்க கூடிய படம் என்று
எங்கேயோ யாரோ எழுதி இருந்ததே உலகப் படத்துக்கான சிறந்த வரையறை என்பது என் கருத்து.
பொதுவாக தமிழில் இது போன்ற உலகப்படங்கள் சமீப காலமாகத்தான் வருகின்றது
என்று கூறுகிறார்கள். ஆனால் கலைக்கண்கள் கொண்டு கவனித்துப் பார்க்கும்போது தமிழில் நிறைய உலகப் படங்கள் கண்டுகொள்ளப்படாமல்
இருக்கிறது. சமீபத்தில் நான் கண்டு ரசித்த அப்படிப்பட்ட ஒரு படத்தின் ஒரு காட்சியை
இங்கே கூறுகிறேன்.
படத்தின் இறுதி காட்சி. தீவிரவாதிகள் விமானியை சுட்டு விடுகின்றனர்.
உயிருக்கு போராடும் விமானியால் விமானத்தை இயக்க முடியவில்லை. தீவிரவாதிகளை
வீழ்த்தி விடும் கேப்டன் விஜயகாந்த் விமானியின் அறைக்கு வருகிறார். விமானியின்
வழிகாட்டுதல்படி விமானத்தை ஒரு குடியிருப்பு பகுதியில் மரங்களுக்கு இடையே பத்திரமாக லேன்ட் செய்கிறார்.
இதில் என்ன உலகத்தரம் என்று கேட்க வேண்டாம். மேலோட்டமாக பார்க்காமல் அந்த
காட்சியை கூர்ந்து கவனியுங்கள். கேப்டன் உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய
நல்ல கருத்துகளை இந்த ஒரே காட்சியில்
எடுத்து சொல்கிறார் என்பது தெரியும். விமானி அவரை விமானத்தை இயக்க சொல்லும்போது ‘எனக்கு
ஒன்னும் தெரியாதே’ என்கிறார். என்ன ஒரு நுட்பமான, ஆழமான வசனம் பாருங்கள். ஒரு
விஷயம் உனக்கு தெரியாதென்றால் அதை ஒத்து கொள்ளத் தயங்காதே என்று போகிற போக்கில்
சொல்லிவிட்டு போகிறார் கேப்டன். இன்று எத்தனை பேர் அப்படி ஒத்து கொள்கிறார்கள்.
ஒன்றுமே தெரியாவிட்டாலும் எல்லாமே தெரிந்தது போல பேசுபவர்கள்தானே அதிகம். அதை
தன்னுடைய வசனம் மூலம் தவறு என்று புரிய வைக்கிறார் கேப்டன்.
“நான் சொல்லித்தரேன்! நீங்க உட்காருங்க” என்று விமானி பதில்
அளித்ததும் தயங்காமல் விமானியின் இருக்கையில் அமர்கிறார் கேப்டன். தெரியாத விஷயத்தை
கற்று கொள்ள தயங்கக் கூடாது என்பதுதான் கேப்டன் உலகுக்கு இதில் எடுத்துக் கூறும்
கருத்து. மறு வினாடி விமானியின் வழிகாட்டுதல்படி அங்கே இருக்கும் ஒரு குச்சியை
பிடித்து இழுக்கிறார். ஒரு வேளை விமானத்தின் பிரேக்காக இருக்க வேண்டும். உடனே விமானம்
மரங்களுக்கு இடையே தரை இறங்குகிறது. வழவழப்பான ரன்வேயிலேயே விமானம் தரை இறங்குவது
கஷ்டம். அப்படியிருக்க இந்த மாதிரி
இடத்தில் எல்லாம் விமானத்தை தரை இறக்க முடியாது என்று கேப்டன் நினைக்கவில்லை. விமானியை
பார்த்து “என்னய்யா! விளையாடுறியா?” என்று பல்லை கடிக்கவில்லை. தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார்.
பிரேக்கை வலு கொண்ட மட்டும் இழுத்து மரங்களுக்கு நடுவில் விமானத்தை சேதாரமின்றி தரை இறக்குகிறார்.
இந்த காட்சியை அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்தவர் “என்னயா? இதெல்லாம்
நம்புற மாதிரியா இருக்கு?” என்றார். இப்படி நம் படங்கள் சிறந்தவை இல்லை என்ற எண்ணம் கொண்டவர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை.
தமிழ் சினிமா உலகளவில் கவனம் பெறாமல் போனதற்கு இவர்கள் போன்றவர்கள்தான் காரணம்.
சேதுபதி ஐ.பி.எஸ் என்ற அந்த படத்தின் ஒரே காட்சியிலேயே இத்தனை உலகத்தரம் வாய்ந்த
கருத்துகள் இருக்கும்போது மொத்த படமும் எத்தனை கருத்து குவியலாக இருக்க வேண்டும்.
கவனித்து பார்த்த்தால் உங்களுக்கே புரியும். கேப்டன் உணர்த்தி இருக்கும் கருத்துகள் மொத்த உலகத்துக்கும் பொதுவானது என்று
யாரேனும் மறுக்க முடியுமா? அரசாங்கம் இதை பரிசீலித்து அந்த படத்துக்கு சிறப்பு அனுமதி கொடுத்து விருது
வழங்கும் விழாக்களுக்கும், திரைப்பட விழாக்களுக்கும் அனுப்ப வேண்டும்.
ஒரே காட்சியிலேயே இத்தனை விஷயங்கள் இருந்தால் தமிழ் சினிமாவின் ஓட்டு
மொத்த வரலாற்றில் இது போன்ற எத்தனை படங்கள் கண்டுக்கொள்ளப்படாமல் போயிருக்ககூடும். எனவே நாம் தொடர்ந்து பழைய உலக படங்களை பார்த்து அரசாங்கத்துக்கு பரிந்துரைக்க
தயாராக வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
ஒரு விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு அதன் பயணிகள் ஒரு தீவில் பணயக் கைதிகளாக இருப்பார்கள். அவர்களை மீட்க கேப்டர் அற்புதத் திட்டம் தீட்டி அத்தனை தீவிரவாதிகளும்(!) நமாஸ் தொழுகையில் இருக்கையில் உள்ளே புகுந்து பயணிகளிடம் பேசி தப்பிக்கும் திட்டத்தை சொல்லி மீண்டும் அவர்கள் தொழுகை செய்யும் நேரத்தில் வெளியேறிடுவார். இதன்மூலம் தீவிரவாதிகள்லாம் தெய்வ பக்தி மிக்கவர்கள்ன்றதையும் உலகத்துக்கு எடுத்துச் சொல்லி, இந்துக்கள் தீவிரவாதி ஆகறதில்லைங்கற ஒப்பற்ற உண்மையையும் புரிய வெச்சாரே எங்க கேப்டர்ர்ர்... அவர மாதிரி முடியுமாப்பாஆஆஆ? இப்படி ஒப்பற்ற உண்மைகளைச் சொல்ற அவரோட எத்தனை படம் பாத்து ரசிச்சவங்க நாங்க, யாருகிட்ட....?
ReplyDelete