“ஐயா. நீங்க
பெரியவரு. facebook,whatsappல நெறைய எழுதறீங்க. இந்த முறை தேர்தல்ல எனக்கு யாருக்கு ஒட்டு போடுறதுன்னு வழி காட்டுங்க ஐயா”
“அது என் கடமை தம்பி”
“இந்த முறை ஆளுங்கட்சிகே
ஒட்டு போடலாமா?”
“ஸ்டிக்கர் ஓட்டுறது தவிர.
ஒண்ணுமே செய்யல தம்பி அவங்க. இந்த அஞ்சு
வருசத்துல.அடிமை அரசியலை வளர்த்ததுதான் ஒரே சாதனை”
“அப்போ இதுக்கு
முன்னாடி ஆண்டவங்களுக்கு?”
“இதுவரைக்கும்
கோடிக்கணக்குல கொள்ளை அடிச்சது பத்தாதுன்னு திரும்ப வேற ரெண்டு பெரும் சேர்ந்து கூட்டணி
வச்சுகிட்டு ஒட்டு கேட்டு வராங்க. போன
முறை பதவில இருந்தப்போ மக்களை என்ன
பாடுபடுத்தினாங்க இவங்க”
“அப்போ அந்த நடிகருக்கு?”
“அவர் பேசுறது அவருக்கே புரியாது. கூட்டணிக்கு பேரம் பேசிட்டு எதுவும் சரியா
வரலைன்னதும் தனியா நின்னு கிங் ஆகப் போறதா
அவரே சொல்லிக்கிறாரு. போன அஞ்சு வருசத்துல மக்களுக்கு
எதாச்சும் பண்ணனும்னு முயற்சியாவது செஞ்சாரா?”
“அப்போ அந்த நாலு பேருக்கு?”
“நாலு பேரு மக்களுக்கு
நல்லது பண்ணப் சேர்ந்துட்டாங்கலாம். இவங்க அவங்களோட பி டீம்யா. அதுல எம்பியா இருந்தவரு அவர் தொகுதிக்கு என்ன நல்லது
செஞ்சாரு முதல்ல?”
“அப்போ பெரிய படிப்பு
படிச்சவருக்கு?”
“இத்தனை வருசமா ஜாதி
அரசியல் பண்ணிட்டு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரப் போறாங்களாம்.”
“அப்போ சென்ட்ரல்
ஆளுங்களுக்கு”
“மதத்தை வச்சு அரசியல்
பண்ற ஆளுங்க அவங்க. நாட்டை சுடுகாடா மாத்திடுவானுங்க”
“அப்படின்னா மிச்சம்
இருக்குறவரு செந்தமிழர்தான். கட்டாயம்
அவரு நல்லவராதான் இருக்கணும்”
“இலங்கைத் தமிழரை
காப்பாத்தப் போறேன்னு அரசியலுக்கு வந்துட்டு . இப்போ தமிழ்நாட்டை தமிழன்தான்
ஆளணும்னு அரசியல் பண்றாரு. அவரை நம்பாதே தம்பி ”
“ஐயா!. அப்போ இங்க
யாருமே நல்லவங்க இல்லையா ஐயா. இந்த அரசியலை நினைச்சு எனக்கு மனசு நொந்து போச்சு. பக்கத்தில ஒரு ஆன்மீக குரு
யோகா கிளாஸ் நடத்துறாரு. அங்க போய் சேர்ந்து சாமியாரா ஆயிடுறேன்”
“ஐயோ அவரா?. யானை
தண்ணி குடிக்கப் போற பாதையெல்லாம் வளைச்சு போட்டுகிட்டாறு . அவர் மேல நெறைய
கம்ப்லைண்ட்ஸ் இருக்கு தம்பி. அவர் கிட்ட எல்லாம் போகாத தம்பி.”
“யோவ்வ்வ்வ்வ்”
No comments:
Post a Comment