ஒரு நாவலின் முன்னுரையில் சுஜாதா "நாளைக்கே ரேடியோ, செய்தித்தாள் எல்லாம் சேர்ந்து மூன்றாம் உலக யுத்தம் தொடங்கிவிட்டது என்று சொன்னால் நாமெல்லாம் நம்பத்தான் போகிறோம். கம்யூனிகேசன் மீடியாவைவை கட்டுப்படுத்துபவர்களால் உலகையே கட்டுபடுத்த முடியும்" என்று எழுதியிருப்பார் . சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட நிலையில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்றெல்லாம் எழுதி மக்களை நம்பவைப்பது கடினம். ஆனால் கனகா மரணமடைந்தார் என்று எழுதினால் நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.
கனகாவை பற்றின அந்த செய்தி எப்படி உருவானதோ தெரியாது. ஆனால் கிட்டத்தட்ட எல்லா செய்தி இணைய தளங்களும் இந்த செய்தியை பதிவேற்றி விட்டன. இந்த செய்தி வெளி வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னர்தான் கனகா கேரளாவில் கைவிடப்பட்ட கேன்சர் நோயாளிகளுக்கான மருத்துவமனையில் தன்னுடைய கடைசி நாட்களை எண்ணி வருவதாக இன்னொரு செய்தி. பாவம் கனகா . தான் மரணமடைந்த செய்தியை தானே படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார். நல்ல வேளையாக உள்ளூரில் இருந்ததால் உடனடியாக செய்தி தெரிந்து செய்தி அச்சில் ஏறும் முன் மறுப்பு வெளியிட்டு விட்டார். ஒரு வேளை வெளிநாட்டுக்கு சென்றிருந்து தமிழ்நாட்டில் நடப்பதை தெரிந்து கொள்ள முடியாத சூழலில் இருந்திருந்தால் அவ்வளவுதான். திரும்பி வந்து தான் கனகாதான் என நிரூபிக்க படாத பாடுபட்டிருக்க வேண்டும்.
மீடியாக்கள் செய்திகளை தருவதை விட்டுவிட்டு, செய்திகளை உருவாக்கும் நிலைக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. . அதற்கு ஒரு உதாரணம்தான் கனகாவுக்கு நடந்தது. இப்போது சுஜாதா சொன்னதை மீண்டும் நினைவுபடுத்தி கொள்ளுங்கள்.கம்யூனிகேசன் மீடியாவை கட்டுப்படுத்துபவர்களால் உலகையே கட்டுப்படுத்த முடியும்.
*************************
இது கடந்த வாரம் வந்த இன்னொரு செய்தி. பிசிசிஐ நியமித்த விசாரணை குழு ஸ்ரீனிவாசன் குற்றமற்றவர் என்று அறிக்கை அளித்து விட்டதாம். அதனால் ஸ்ரீனிவாசன் மீண்டும் பிசிசிஐ தலைவராக பதவி ஏற்று விட்டார். அதாவது அவர்கள் செய்த குற்றத்தை அவர்களே விசாரித்து தீர்ப்பு அளித்து கொண்டுள்ளனர் 'முதல்வன்' ரகுவரன் பாணியில் சொல்ல வேண்டுமானால் "அவரே குண்டு வைப்பாராம். அப்புறம் அவரே அதை எடுப்பாராம்".
நல்ல வேளையாக இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்தபோது நீதிபதிகள் 'நாட்டாமை' விஜயகுமார் போல "செல்லாது!! செல்லாது!!" என்று அறிவித்து விட்டனர். பார்க்கலாம் என்ன நடக்க போகிறது என்று.
செல்லாது!! செல்லாது!!
ReplyDeleteஎது?
Deleteமுக்கிய அறிவிப்பு : சென்னை பதிவர் சந்திப்பு 2013← இணைப்பை சொடுக்கி வாசிக்கவும்... அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...
ReplyDeleteதொடர்புக்கு : dindiguldhanabalan@yahoo.com
+91 9944345233