"ஹலோ யாரு பேசுறது?"
"நாந்தாங்க ஒபாமா பேசுறேன்"
"யாருங்க அமெரிக்க அதிபர் ஒபாமாவா?"
"ஆமா"
"சொல்லுங்க சார். என்ன விசயமா கால் செஞ்சு இருக்கீங்க"
"என்னங்க. ஒபாமா பேசுறேன்னு சொல்றேன். கொஞ்சம் கூட ஆச்சரியப்படவே மாட்டேங்குறீங்க"
"இதுல ஆச்சரியபட என்ன சார் இருக்கு. ப்ளாக் எழுத வந்ததுல இருந்து இப்படி தினமும் யாராச்சும் போன் செஞ்சு நீயெல்லாம் என்னத்துக்கு எழுத வர்றன்னு கழுவி கழுவி ஊத்துறாங்க. ஒரு படைப்பாளி ஆன பின்னாடி இப்படி ரசிகர்கள் தொல்லை பண்றது சகஜம்தானே?"
"உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு. பை தி வே நான் எதுக்கு கூப்பிடேன்னு சொல்லிடுறேன். நீங்க என்னோட அரசியல் ஆலோசகரா இருக்க சம்மதிக்கணும்"
"ஆனா சார், எனக்கு அமெரிக்க அரசியல பத்தி ஒன்னும் தெரியாதே"
"நோ நோ. அமெரிக்க அரசியல் பத்தி எல்லாம் நான் பாத்துக்குறேன். நான் என்னோட கட்சியோட பிரான்ச்சை தமிழ்நாட்ல ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அதுக்குதான் உங்க ஆலோசனை தேவை"
"என்ன சார் சொல்றீங்க. அது எப்பிடி சாத்தியம்?"
"ஏன் சாத்தியம் இல்லை. எங்க ஊருகாரன் இங்க வந்து சில்லறை வியாபாரம் செஞ்சா ஒத்துப்பீங்க. அரசியல் செய்ய வந்தா ஒத்துக்க மாட்டீங்களா. அது மட்டும் இல்லாம ஏற்கனவே நீங்க இத்தாலி....... "
"சார் சார் மேல சொல்லாதீங்க . எனக்கு புரிஞ்சிடுச்சு."
"நீங்க ஷார்ப் தம்பி "
"ஆனா ஏன் இந்தியா மேல இந்த திடீர் ஆர்வம்"
"என்னோட பதவி காலம் இங்க சீக்கிரமா முடிய போகுது தம்பி. உங்க ஊரு மாதிரி இங்க திரும்ப திரும்ப பதவிக்கு வர முடியாது. அதான் பதவி போன பின்னாடி உங்க ஊருக்கு வந்து எதாச்சும் பதவியை பிடிக்கலாமுன்னு"
"வெரி குட் ஐடியா சார். ஆனா ஏன் கிட்ட ஏன் யோசனை கேக்குறீங்க"
"அதுக்கு காரணம் எங்க உளவுத்துறை ரிப்போர்ட்படி யாருமே படிக்காட்டியும் வாரத்துக்கு ரெண்டு போஸ்ட் போடுறது தமிழ்நாட்டுல நீங்க மட்டும்தான். அந்த சின்சியாரிட்டி எனக்கு பிடிச்சு போச்சு"
"தாங்க்ஸ் சார்"
"சரி சொல்லுங்க. தமிழ்நாட்ல நான் கட்சி ஆரம்பிச்சு ஆட்சியை பிடிக்கணும். அதுக்கு என்ன வழி"
"அதுக்கு நீங்க முதல்ல சினிமால நடிக்கணும் சார். இல்ல சினிமால வசனம் எழுதறது, கேமராமேன், எடிட்டிங் இந்த மாதிரி வேலைங்களையாவது செஞ்சு இருக்கணும்."
"என்ன தம்பி! அரசியலுக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்?"
"இங்க பெரிய சம்பந்தம் இருக்கு சார்."
"இந்த வயசுக்கு மேல என்னால சினிமாவுக்கு வந்து சாதிக்க முடியாதே"
"நீங்க சொல்றது வாஸ்தவம்தான். ஒன்னு செய்யலாம். நம்ம கட்சியில ஸ்டார் யாரையாச்சும் சேத்து முக்கிய பதவி கொடுத்துடலாம்."
"ஓகே தம்பி! எனக்கு தெரிஞ்சு பமீலா ஆண்டர்சன் அப்பிடின்னு ஒரு ஸ்டார் இருக்காங்க. அவங்களை கட்சியில சேத்துக்கலாம்"
"சூப்பர் ஐடியா சார்! அவங்க மட்டும் நம்ம கட்சிக்கு ஓட்டு கேட்டா நமக்கு வெற்றிதான். அப்படியே எங்க ஊருல சாம் ஆண்டர்சன்னு ஒருத்தர் இருக்கார். அவரையும் கட்சில சேத்துகிட்டு பிரச்சார பீரங்கிகளா வச்சுப்போம். இப்போ நம்ம கட்சிக்கு ஸ்டார் வால்யூ கிடைச்சிடிச்சு."
"அடுத்து நான் என்ன செய்யணும்"
"கட்சிக்கு என்ன பேரு சார் வைக்க போறீங்க?"
"டெமாக்ரடிக் பார்ட்டி"
"சார்! இப்படி எல்லாம் பேரு வச்சா ஒரு பய வோட்டு போட மாட்டான். கட்சியில திராவிடர் அப்படின்னு வார்த்தை கட்டாயம் வேணும்."
"திராவிடர் அப்படின்னா என்ன அர்த்தம்?"
"அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு மட்டும் இல்ல. எங்க ஊருல பாதி பேருக்கு தெரியாது. அந்த வார்த்தை இருந்தா வோட்டு போடுவோம். அவ்வளவுதான்."
"கோவிச்சுக்காதீங்க தம்பி. நீங்களே ஒரு நல்ல பேரா சொல்லுங்க."
"ம்ம். சரி. நீங்க சொன்ன டெமாக்ரடிக் கூட திராவிடர் சேத்து, டெமாக்ரடிக் திராவிடர் முன்னேற்ற கழகம் அப்படின்னு பேரு வச்சுக்கலாம்."
"நல்ல பேரு. நல்ல பேரு"
"சரி இப்போ கட்சி மீட்டிங்க்ல பேசணும்னா எப்பிடி பேசுவீங்க?"
"தமிழக மக்களே! நாம் முன்னேறுவோம். வளர்ச்சி அடை ...."
"நிறுத்துங்க நிறுத்துங்க. இப்படியா பேசுறது."
"இப்படி பேசித்தான் அமெரிக்கால வோட்டு வாங்குனேன் தம்பி."
"அது அமெரிக்கா. இங்க இப்பிடி பேசுனா ஒரு வோட்டு கிடைக்காது."
"அப்புறம் எப்பிடி பேசணும்?"
"மக்களே! நான் சின்ன வயசுல சிகாகோல MGR படம் பாத்து வளர்ந்தவன். நான் ஒரு தீவிர MGR ரசிகன்னு ஆரம்பிங்க. அப்புறம் அப்பிடியே உங்களுக்கு தெரிஞ்சதை பேசி பிக்கப் செஞ்சுக்கங்க."
"சரி"
"முடிஞ்சா கைல MGR டட்டூ ஒன்னு போட்டுகோங்க. அப்புறம் என்னை தம்பி, தம்பின்னு வாய் நிறைய கூப்பிடுறேங்களே. அப்போ நான் உங்களை எப்பிடி கூப்பிடணும் "
"அண்ணா"
"திரும்ப சொல்லுங்க"
"அண்ணா"
"இப்பிடி அடிக்கடி உங்க பேச்சுல அண்ணாவையும் சேத்துக்கோங்க"
"சரி தம்பி. ஆனா மக்களுக்கு என்ன மாதிரியான திட்டம் கொண்டு வருவீங்கன்னு யாராச்சும் கேட்டா."
"அது ரொம்ப சிம்பிள் சார். மக்கள் எல்லாருக்கும் அமெரிக்கால அரை கிரவுண்ட் இடமும் ஒரு ஆடி காரும் இலவசமா தரேன்னு சொல்லிடுங்க. அதுக்கு மேல திட்டம், கிட்டம்னு எவனும் வாயை திறக்க மாட்டான்"
"i see"
"அப்புறம் ஒரு டிவி சேனல் ஆரம்பிக்கணும் சார்"
"ஆரம்பிச்சு மக்களுக்கு விழிப்புணர்வு தர்ற மாதிரி நிகழ்ச்சிகள் போடணுமா"
"சார். முதலுக்கே மோசம் வந்திடும். அப்பிடியெல்லாம் செஞ்சுடாதீங்க. ஹாலிவுட் நடிகைகளை கூப்பிடுகிட்டு வந்து டான்ஸ் ப்ரோக்ராம் நடத்துங்க. அப்புறம் கேம் ஷோ. நியூஸ் மட்டும் நாளுக்கு மூணு தடவை போட்டு எதிர்க்கட்சிகாரங்களை கண்டபடி திட்டணும். அது போதும். அப்புறம் அந்த டிவியை கூட நானே கவனிச்சுகிறேன்"
"சரி தம்பி! நான் எப்போ தமிழ்நாட்டுக்கு வரணும்"
"எப்போ வேணும்னாலும் வரலாம். வரும்போது சொல்லிட்டு வாங்க. மதுரைல மீட்டிங் வச்சுக்கலாம். மீனம்பாக்கம் ஆரம்பிச்சு மதுரை வரை ப்ளெக்ஸ் பானர் வச்சுடலாம். 'வாஷிங்டன் வள்ளுவனே! வருக ', கலிபோர்னியா காந்தியே வருக' இந்த மாதிரி வாசகம் எழுதிப்போம்"
"இப்பிடி எல்லாம் ரோடுல பானர் வச்சா மக்களுக்கு இடைஞ்சலா இருக்காது."
"எங்க ஊருல மக்களை பத்தி யோசிச்சா அரசியலே உங்களுக்கு சரி வராது சார்."
"ஓகே தம்பி. இப்போ எனக்கு எல்லாம் புரிஞ்சு நம்பிக்கை வந்திடுச்சு."
"சூப்பர் சார்! 2016 நாமதான்"
பின்குறிப்பு: பமீலா ஆண்டர்சன் படத்தை கூகிளில் தேடி பார்த்து கொள்ளவும்.
ஹா.... ஹா.... கலக்கல்...
ReplyDeleteSupeeeeeeeer kalakkal
ReplyDelete