"தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தை பற்றி சிலர் நல்ல விதமாக சொல்லி இருந்ததால் படம் பார்க்க சென்றிருந்தேன். படம் நான் எதிர்பார்த்த அளவு இல்லை. படம் பார்த்ததும் படத்தின் கதை விவாதம் பற்றி எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. என்ன என்று நீங்களே பாருங்கள் என பாருங்கள்.
சுந்தர் C : பாய்ஸ்! நாம இப்போ ஒரு படம் பண்ண போறோம். நான் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் பாத்து இன்ஸ்பையர் ஆயிட்டேன். நாம அதே மாதிரி ஒரு கதை பண்ணனும்.
உதவி இயக்குனர் 1: அதுக்கென்ன சார்? அந்த படத்தையே திரும்ப எடுப்போம். யாராச்சும் கேட்டா ரீ மேக் அப்பிடிம்போம்
சுந்தர் C : அது தப்பு. அப்படியே எடுத்து ரசிகர்களை ஏமாத்த கூடாது. . தொட்டதும் தெரியாம சுட்டதும் புரியாத மாதிரி நேக்கா பண்ணனும்.
உதவி இயக்குனர் 1: லேசா புரியுது சார்.
சுந்தர் C :இப்போ OK OK படத்தை எடுத்துக்குவோம். ஹீரோ எல்லா ஃபிராட் வேலையும் செஞ்சு கடைசில ஹீரோயினை காதலிக்க வைக்கிறாரு . நம்ம படத்தோட ஒன் லைனும் இதுதான் .
உதவி இயக்குனர் 2: சரி சார்
சுந்தர் C : OK OKல யாரு மெயின் ரோல் செஞ்சு இருப்பா?
உதவி இயக்குனர் 1 : உதயநிதி, சந்தானம், ஹன்ஷிகா
சுந்தர் C : இப்போ நாம எடுக்குற படத்துல சந்தானம், ஹன்ஷிகா இருக்காங்க உதயநிதி வேண்டாம். ஏன் சொல்றேன்னா உதயநிதியும் இருந்தா கதை நம்மதில்லைன்னு தெரிஞ்சுடும் . எப்பிடி?
உதவி இயக்குனர் 2: சூப்பர் சார்! அனுபவஸ்தர் , அனுபவஸ்தர்தான்
சுந்தர் C : இப்போ அடுத்து ஹீரோ பத்தி பேசலாம் . OK OKல ஹீரோ கேரக்டர் எப்பிடி?
உதவி இயக்குனர் 1: ஐயோ! பயங்கரமான ஃப்ராடு கேரக்டர் சார். வாயை திறந்தா பொய்தான். தெரு தெருவா பொம்பளை பின்னாடி சுத்தும். ஒரு வேலைக்கும் போகாது.
சுந்தர் C : அப்போ நம்ம ஹீரோ ஒரு அப்பாவி. பொண்ணுங்கன்னாலே பயம் . IT கம்பெனில வேலை பாக்குறாரு.
உதவி இயக்குனர்: கலக்கல் சார்!
சுந்தர் C : OK OKல ஹீரோ குடும்பம் பத்தி சொல்லு
உதவி இயக்குனர் 2: சின்ன குடும்பம் சார்! அப்பா, அம்மா, ஹீரோ இதுதான் அவங்க குடும்பம்.
சுந்தர் C :இதை எப்படி மாத்தணும்னா ......
உதவி இயக்குனர் 1: சார் சார்! நானே சொல்றேன். நம்ம ஹீரோ வீட்ல அம்மா, அப்பா,அண்ணன், அக்கா, மச்சான், கொழுந்தியா இப்பிடி எல்லாம் இருக்காங்க. ஒரு கூட்டு குடும்பம்.
சுந்தர் C : இங்கதான் தப்பு பண்றீங்க. நம்ம ஹீரோ கூட்டு குடும்பத்துலதான் இருக்காரு. ஆனா அவருக்கு அம்மா,அப்பா இல்லை.
உதவி இயக்குனர் 1: சாரி சார்!
சுந்தர் C : OK OK ல ஹீரோ லவ் பண்றது முதல்ல சந்தானத்துக்கு பிடிக்காது. காதலை கெடுக்க பார்ப்பார் .பின்ன அவரே சேத்து வைக்க பார்ப்பார் . நம்ம கதைல இதை திருப்பி போட்டுப்போம். அதாவது சந்தானம் முதல்ல லவ்வுக்கு ஹெல்ப் பண்றாரு. ஃப்ராடுத்தனம் செய்ய ஐடியா தராரு . அப்புறம் அவரே கெடுக்க பாக்குறாரு.
உதவி இயக்குனர் 2: பின்னி பெடல் எடுக்கிறீங்க சார்! ஆனா சந்தானம் ஏன் அப்பிடி செய்றாரு?
சுந்தர் C :(மனதுக்குள்) அதான. ஏன் அப்பிடி செய்றாரு.
சுந்தர் C : எல்லாத்தையும் நானே சொன்னா நீங்க எதுக்கு. யோசிச்சு சொல்லுங்க.
உதவி இயக்குனர் 1: (சற்று நேரம் யோசித்து) பிடிச்சுட்டேன் சார்! சந்தானத்தோட தொழிலே காதலை சேத்து வைக்கிறது.
சுந்தர் C : பிரிக்க காரணம்?
உதவி இயக்குனர் 2: சந்தானம் அவருக்கே தெரியாம தன்னோட தங்கச்சியவே லவ் பண்ண ஹீரோவுக்கு ஹெல்ப் செஞ்சுடறார் சார். அது தெரிஞ்ச அப்புறம் பிரிக்க பாக்குறார். ஓகே ஓகே ல வர மாதிரி சந்தானத்துக்கு கை கூடாத காதலையும் வச்சுடுவோம்.
சுந்தர் C : சூப்பர்! நீங்க சீக்கிரமா டைரக்டர் ஆயிடுவீங்க.
உதவி இயக்குனர் 2: தேங்க்ஸ் சார்.
சுந்தர் C: இப்போ ஹன்சிகா. இவங்களை ஹீரோ வேலை பாக்குற ஆபீஸ்லயே வேலை பாக்க வச்சுடுவோம். OK OK ல ஹன்சிகா அப்பா சென்னைல போலீஸ் கமிஷனர். நம்ம படத்துல ஹன்சிகா அப்பா சென்னைலயே இல்ல. நாகர்கோயில்ல வசிக்கிற ஒரு சாப்டான கேரக்டர்.
உதவி இயக்குனர் 1: இதுக்கு மேல நான் சொல்றேன் சார்! ஹன்சிகாவுக்கு பாத்த மாப்பிள்ளை கேரக்டர் ஒன்னு OK OK ல உண்டு. ரொம்ப சின்ன ரோல். நாம அந்த கேரக்டரையே நம்ம படத்துல டெவலப் பண்ணிக்கலாம் சார்.
சுந்தர் C : குட்! நீங்க என்னையே மிஞ்சிடுவீங்க போல. இப்போ நாம புது கதை ரெடி செஞ்சுட்டோம். ஸ்க்ரீன் ப்ளே எழுதிடுங்க.
உதவி இயக்குனர் 1: OK OK சார்
Ulter nonsense. Then all love stories are copied from each other??
ReplyDelete