அடுத்த பிரதமர் யார் என்பதே இன்றைய ஹாட் டாபிக். மோடியையும், ராகுலையும் பலர் முன் மொழிந்தாலும் என்னுடைய ஓட்டு புரட்சி தலைவிக்கே. சமீபத்தில் அவர் எடுத்த நடவடிக்கைகளில் உள்ள ராஜ தந்திரமும் , வகுத்த திட்டங்களில் உள்ள மக்கள் அக்கறையும் என்னை அவர் பக்கம் சாய வைத்து விட்டன. நான் மட்டும் சாய்ந்தால் போதுமா? நீங்களும் சாய வேண்டாமா? அதற்காகவே இதை எழுதுகிறேன். ஆனால் நீங்கள் அதிகமா சாய்ந்து கீழே விழுந்து அடிபட்டு கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
ஒரு அதிரடி நடவடிக்கை:
அவர் கைது செய்யப்படுவார் என்று யாருமே நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டார்கள். சாதாரண மனிதரா அவர்? தனக்காக உயிரை கொடுக்க துணிந்த 50 லட்சம் பேரை கொண்டவர் . அப்படிப்பட்ட ஒரு மனிதரை கைது செய்வது என்பது சாதாரண விசயமா என்ன? அதற்கு எத்தனை துணிச்சல் வேண்டும். புரட்சி தலைவியால் தவிர வேறு யாரால் இத்தகைய அதிரடி நடவடிக்கை எடுக்க முடியும்? கைதுக்கு பின் அவரை பின் பற்றும் அந்த 50 லட்சம் பேரும் மாபெரும் போராட்டத்தில் இறங்குவர் என்பதை கணித்து அவரை திஹாருக்கு மாற்றியது சாணக்கியர்களும் போற்றும் ராஜ தந்திரமல்லவா? நாளை சீனாக்காரனையும் , பாகிஸ்தான்காரனையும் எதிர்க்க வேண்டுமானால் இத்தகைய துணிச்சல்தானே தேவை. என்னதான் பவர் ஸ்டாரின் ரசிகன் என்றாலும், சட்டத்தை காப்பாற்றும் நோக்கில் புரட்சி தலைவி எடுத்த அதிரடி நடவடிக்கை என்னை அவருக்கு ஆதரவு அளிக்க செய்து விட்டது.
ஒரு மக்கள் நல திட்டம்:
எல்லாருக்கும் சம உரிமை பற்றி பேசும் நாடு இது. ஆனால் இந்த நாட்டில் ஒதுக்க பட்ட ஒரு இனம் உண்டு. தினம் தினம் குடித்து அரசுக்கு வருவாய் அளிப்பதோடு இல்லாமல், வாய் நிறைய தத்துவம் பேசி தமது நண்பர்களை மகிழ்விக்கும் குடிகாரர்களின் நலன் பற்றி சிந்திக்க கூட யாரும் இல்லை. இப்படி தாம் அரசால் ஒதுக்கப்படுகிறோமே என்ற கவலையிலேயே அதிகம் குடிப்பவர்களும் உண்டு.
அப்படி என்னதான் அவர்களுக்கு குறை என்கிறீர்களா? குவாட்டரும், கட்டிங்கும் வாங்கி மிக்சிங்குக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைக்காமல் அவதி பட்டு வந்தனர் அவர்கள். தினமும் மினரல் வாட்டரும், கோக்கும் வாங்கி கலந்தால் கட்டு படி ஆகாது. ஒரு ரூபாய் பாக்கெட் நீரோ தரமற்றது . வாங்கி கலந்தால் உடல் நிலை பாதிக்கும். இப்படிப்பட்ட சிக்கலான பிரச்சனையால் சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வந்தனர்.
ஆனால் இப்போதோ புரட்சி தலைவியின் பத்து ரூபாய் குடி தண்ணீர் திட்டத்தால் அவர்களின் முகத்தில் சிரிப்பு மீண்டுள்ளது. இனி மிக்சிங் பற்றி கவலை இல்லை. பஸ்களில் கிடைக்கவிருக்கும் சரக்கு விரைவில் டாஸ்மாக்கையும் வந்து சேரும். அதன் பின் குறைந்த செலவில் நிறைந்த திருப்தி பெறலாம் என்று ஆடி பாடி மகிழ்ந்து வருகின்றனர். இப்படி குடி மக்களின் நுணுக்கமான பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து இது மக்கள் நலம் பேணும் அரசு என புரட்சி தலைவி நிரூபித்து விட்டார்.
எனவே மக்களின் குறைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டுமெனில் மத்தியில் அஇஅதிமுக தலைமையில் ஆட்சி அமைவதே சிறந்தது என்பதே எனது கருத்து. அண்ணா நாமம் வாழ்க! புரட்சி தலைவர் MGR நாமம் வாழ்க! என்று சொல்லி என் கட்டுரையை முடித்து கொள்கிறேன்.
இந்த பதிவால் யாருடைய மனமாவது புண்படுமாயின் இந்த பதிவை உடனே நீக்கி விடுவேன்.
drink,mix,food then what Happiness? so there will be lot of Red light areas in T N ?
ReplyDeleteஇப்பதிவிற்க்கு மேலும் வலு சேர்க்கும் வண்ணம் வேறு சில திட்டங்களையும் சேர்த்திருக்கலாம்..
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் அழுத்தமாக தெரிவித்திருக்கலாம்..
சட்டென முடிந்துவிட்டதைபோல இருக்கிறது..
அருமை..
தேர்தல் நெருங்கும்போது இன்னும் வலுவான பிரசாரம் செய்யலாம் :) வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே
Deleteநீங்க சொல்றதுலாம் நியாயமாதான் படுது. அதனால, என் ஓட்டு அம்மாவுக்கே!
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி தோழியே
Delete