சின்ன வயசுல இருந்தே நாயின்னா எனக்கு பயங்க. தெருல போகும்போது வழில நாயை பாத்தா ஒரு 20 அடி தூரம் தள்ளி போயிடுவேன். இல்ல போக வேண்டிய ரூட்டையே மாத்திடுவேன். இந்த நாயோ போபியா போக என்ன வழின்னு போன வாரம் முழுக்க நான் யோசிச்சேங்க (நெஜமா யோசிச்சேங்க). அப்பிடி யோசிச்சு நான் கண்டுபிடிச்ச வழி என்னன்னா வீட்ல ஒரு நாய் வளத்தா எனக்கு நாய் மேல இருக்குற பயம் போயிடும். இந்த முடிவு எடுத்துட்டு ஒரு வழியா நாய் விக்குற ஒருத்தரையும் தேடி கண்டு பிடிச்சேங்க. நல்ல ஜாதி நாயா வாங்குறது என்னோட ப்ளான். அவரும் நானும் என்ன பேசிக்கிட்டோம்னு நீங்களே பாருங்க.
"சார்! உங்களுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி போன் பண்ணது நாந்தாங்க"
"ஓ! அந்த நாய் பத்தி விசாரிக்க வரேன்னு சொல்லி இருந்தீங்களே. அவரா?"
"ஆமாம். அவரேதான்"
'சொல்லுங்க. எந்த இனத்து நாய் வேணும்னு முடிவு செஞ்சுடீங்களா?"
"இனமா? நல்லா குலைக்குற மாதிரி நாய் குடுங்க"
"ஹாஹஹா! சார் இந்த ஆல்பத்தை பாருங்க. இதுல என் கிட்ட இருக்குற எல்லா நாய் வகைகளோட போட்டோ இருக்கு. எது பிடிக்கிதுன்னு சொல்லுங்க". அவர் எடுத்து குடுத்த ஆல்பத்தில் 20 பக்கங்கள் இருந்திருக்கும். எடுத்து புரட்டினேன். 12வது பக்கத்தில் எனது கனவு நாயை கண்டு பிடித்து விட்டேன்
" சார்! எனக்கு இந்த நாய் பிடிச்சிருக்கு சார். இதையே முடிச்சுடலாம்"
"குட்! நல்ல செலக்சன். லாப்ரடார் இதுக்கு பேரு. நல்ல புத்திசாலி நாய்ங்க"
"ரொம்ப சந்தோசம். இது எவ்வளவு ஆகுங்க?"
"5000 ருபாய்"
எனக்கு பகீர் என்றது. நாய்க்கு போய் 5000 முதலீடு செய்வதா? இருந்தாலும் நாய் வாங்கும் ஆசையை கை விடவும் மனது இல்லை. "சரிங்க! நாளைக்கு பணத்தோட வந்து இதையே வாங்கிகிடுறேன்ங்க" என்றேன்.
"இருங்க. நீங்க புதுசா நாய் வழக்க போறதால உங்களுக்கு சில டிப்ஸ் தர வேண்டியது என் கடமை."
"சொல்லுங்க சார்!"
"வாங்க போற நாய்க்கு என்ன சாப்பாடு போடுவீங்க"
"இது என்ன சார் கேள்வி? எங்க வீட்ல மீந்து போற பழைய சாதத்தை போட வேண்டியதுதான்"
"வாட்? ஃபாரின்ல இருந்து வந்த நாய்ங்க இது. இதுக்கு போய் பழைய சாதம் போடுவேங்குறீங்க? பெடிக்ரீ அப்பிடின்னு கடைல ஒரு அய்ட்டம் கிடைக்கும். அதை மட்டும்தான் இதுக்கு போடணும். அப்புறம் வாரம் ஒரு நாள் கட்டாயமா சிக்கன் இல்ல மட்டன்."
"நானே 2 வாரத்துக்கு ஒரு முறைதான் நான்-வெஜ் சாப்பிடுவேன். இருந்தாலும் பரவாயில்ல. நாய்க்கு மட்டும் தனியா செஞ்சு போட்டுறேன்"
"சரி. அப்புறம் உங்களுக்கு தினமும் வாக்கிங் போற வழக்கம் இருக்கா"
"எனக்கு அதுக்கெல்லாம் எங்க சார் நேரம்."
"இனிமே நீங்க நாயை தினமும் வாக்கிங் கூப்பிட்டுகிட்டு போகணும்."
"நாய் வெயிட் போட்டாலும் எனக்கு ப்ராப்ளம் இல்ல சார். ஆனா தினமும் வாகிங் எல்லாம் கஷ்டம். காலை கடனுக்கு மட்டும் வெளிய போற மாதிரி பழக்கிடுறேன் "
"அட வெயிட் போடுறதுக்கு சொல்லலீங்க. நாய் வீட்லயே இருந்தா அதுக்கு வெறி பிடிச்சு உங்களையே கடிக்க வந்திடும்."
"அச்சச்சோ! அப்போ கட்டாயம் வாக்கிங் கூப்பிட்டுகிட்டு போறேங்க"
"நாய்க்கு தடுப்பூசி எல்லாம் சரியா போட்டுடனும். எப்போ என்ன ஊசின்னு நாங்க சீட் எழுதி குடுத்திடுவோம். மறந்திடாம அந்த ஊசிகளை போட்டுறனும். ஊசி போட போகும்போது ஒரு ஆட்டோ வச்சு நாயை கூப்டுக்கிட்டு போங்க"
நானே என் வாழ்க்கைல நாலு, அஞ்சு தடவைதாங்க ஆட்டோல போயிருப்பேன். எவ்வளவு கூடம் இருந்தாலும் பஸ்ல ஃபுட் போர்ட்தான் . நாய்க்கு போய் ஆட்டோவா அப்பிடின்னு சொல்ல நெனச்சேன். ஆனா சொல்லல. அவர் அடுத்து என்ன சொல்றாருன்னு பாத்தேன்.
"இப்போ சொல்ல போறது முக்கியமான விஷயம். நாய் வயசுக்கு வந்ததும் அதுக்கு ஜோடி சேக்கணும்."
"நாய் வயசுக்கு வந்திடுச்சானு எப்படி கண்டுபிடிக்கிறது ?"
".........."
"சாரி சார்! முறைக்காதீங்க. ஒரு சந்தேகம்....."
"நல்ல சந்தேகம். வயசுக்கு வந்ததும்னா அதுக்கு குறிப்பிட்ட வயசு ஆனதும்னு அர்த்தம்"
"புரியுது சார்! அது வளர்ந்த பின்னாட, கார்த்திகை மாசம் அதை வெளிய அவுத்து விட்டுடுறேன். அது ஒரு ஜோடிய கண்டு பிடிச்சுக்கும். சரியா?"
"சார்! இந்த ஜாதி, கிளிண்டன் செல்லமா வளர்த்தது சார். நீங்க அதுவா போய் ஜோடி சேரும்னு சொல்றீங்க? வியாதி ஏதும் வந்தா?"
"அப்போ என்னதான் பண்றது?"
"இங்க கொண்டு வந்தா நான் அதுக்கு ஜோடி பிடிச்சு தருவேன்."
"இங்க இந்த சர்வீஸ் வேற உண்டா ? "
"ஆமா! அது மட்டுமில்லை.உங்க நாயால உருவான குட்டிகளை நீங்களே எடுத்துக்கலாம்."
"ஓகே சார்! உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு. வேற எதுவும் டிப்ஸ்."
"மத்தது நீங்க நாளைக்கு நாய் வாங்க வரும்போது சொல்றேன். நாளைக்கு நீங்க எத்தனை மணிக்கு வருவீங்க?"
"நான் நாளைக்கு வர மாட்டேன் சார். எங்க வீட்டு பக்கம் தெரு நாய் ஒன்னு குட்டிங்க போட்டு இருக்கு. நான் அதையே எடுத்து வளத்துக்குறேன்"
நல்ல முடிவு.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஎனக்கும் இப்படி எல்லாம் பிரச்சினை இருப்பதாலதான் நான் நாய் வளர்ப்பது இல்லை.
ReplyDeleteரசித்தேன்.
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteநல்ல வேளை உங்கள் சொத்து அழிவதிலிருந்து காப்பாற்றினீர்கள்.. ! நாய் வளர்த்து நாயா போயிருப்பீங்க, நமக்கு உள்ளூர் நாயே போதும்ல !
ReplyDeleteநல்ல படைப்புகள் தோழரே. சிரித்தேன். அதில் அடங்கி இருக்கும் சிந்தனைகளையும் அறிந்தேன். தற்பொழுது நாய் வளர்ப்பும், அதற்கான உணவு விற்பனைகளும் பன்னாட்டு நிறுவனங்களின் அரசியல்.
ReplyDelete