Wednesday, September 4, 2013

ஒரு குட்டி நீதி கதை

ரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது.  அந்த மயிலுக்கு தன் அழகை எண்ணி அதிக பெருமை. தன் ஒரு நாள் அந்த தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று. அந்த குரங்கிடம் தன் தோகையை காட்டி பெருமைப்பட்டு கொண்டது மயில். அதற்கு குரங்கோ,"மயிலே! இந்த தோகையையும் அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னை தேடி வர வேண்டும். ஆனால் அந்த குயிலை பார். தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு செல்கிறது. அழகாக பாடி மனிதர்களை சந்தோசப்படுத்துகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டுக்குள் இருந்தே அதன் அழகிய குரலை கேட்டு மகிழ்கின்றனர். அவர்களை சந்தோசப்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் தன் கூட்டுக்கு வந்து விடுகிறது. உன்னை விட அந்த குயிலே இறைவனின் அற்புத படைப்பு " என்றது.

இதை கேட்டு ஆத்திரமடைந்த மயில் மறுநாள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு சென்று கத்த தொடங்கியது. அதன் கர்ண கொடூர சத்தம் பொறுக்க முடியாமல் மனிதர்கள் அந்த மயிலை அடித்து தோப்புக்குள் விரட்டினார்கள் .

நீதி: பிரபுதேவாவால் SPB போல பாட முடியாது. SPBயால் பிரபுதேவா போல ஆட முடியாது. உங்கள் திறமையை பற்றி  நீங்கள் அறிந்து கொண்டால் போதும். அடுத்தவர்கள் உங்களை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவலைப்பட தேவையில்லை.

Inspired by:  உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் பாடல் 
நன்றி: கவிஞர் வாலி

11 comments:

  1. கதை மிகவும் அருமை.... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்!

      Delete
  2. திறமை அறிந்து செயல்பட சொல்லும் அருமையான நீதிக்கதை..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் மேடம்!

      Delete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

    ReplyDelete
  4. சூப்பர்। அப்பு ...... நாளைய status இதுதான் ...

    ReplyDelete
  5. நச்சின்னு இருந்த்தது nut shell story.
    பாராட்டுக்கள் , தோழரே.
    <> கோ.மீ.அபுபக்கர் ,
    கல்லிடக்குறிச்சி.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...