செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற திட்டம் - செய்தி
"ஏங்க! இங்க எல்லாத்தையும் விட்டுட்டு நாம கட்டாயம் செவ்வாய் போய்தான் ஆகணுமா?'
"சுதா! இவ்வளவு பணம் கொடுத்த அப்புறம் கேக்குற கேள்வியா இது. நாம கட்டாயம் செவ்வாய் கிரகம் போறோம். இது என்னோட கனவு."
"அதுக்கு இல்லைங்க. முன்ன பின்ன தெரியாத ஒரு கிரகத்துக்கு போய் நாம என்ன பண்றது"
"பைத்தியம். நமக்கு மட்டும் இல்ல. அங்க போக எல்லாருக்குமே அது புது கிரகம்தான். இது வரைக்கும் நாம பார்த்தது, கேட்டது எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா வாழ்க்கையை தொடங்கதான் நாம அங்க போறதே. இப்போவே அங்க இருக்குற நிலத்தை எல்லாம் ஆக்கிரமிப்பு செஞ்சுட்டா நாளைக்கு ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பிச்சு நெறையா சம்பாதிக்கலாம். அங்க வரதுல உனக்கு என்ன கஷ்டம்"
"இதுல என்ன கஷ்டமா? சின்ன வயசுல இருந்து நான் அமாவாசை விரதம் இருப்பேன். அதை எப்பிடி விடுறது"
"உன்னை யாரு விட சொன்னா? அங்க ஒன்னுக்கு ரெண்டு நிலா இருக்கு. நீ தாராளமா அமாவாசை அன்னைக்கு விரதம் இருக்கலாம்."
"நம்ம பசங்க படிப்பு?"
"நம்ம குழந்தைங்க படிப்பு செலவு எல்லாத்தையும் அங்க வரப் போற அரசாங்கமே ஏத்துக்கும்"
"வாரத்துக்கு ஒரு படம் பாப்பேன். அங்க தியேட்டர் இருக்கா?"
"தியேட்டர் எல்லாம் செவ்வாய் கிரகத்துக்கு வர இன்னும் நாள் ஆகும் செல்லம். ஆனா அடுத்த மாசம் பவர் ஸ்டார் அங்க ஷூட்டிங் வராராம். இன்னும் நெறைய பேர் படம் எடுக்க அங்க வர போறாங்களாம். சோ சீக்கிரமாவே தியேட்டர் வந்துடும்."
"பண்டிகை வந்தா ஒரு வடை, முறுக்கு கூட செஞ்சு சாப்பிட முடியாதேங்க."
"முறுக்கு இல்லாட்டி என்ன. தமிழ்நாடு அரசாங்கம் அங்க டாஸ்மாக் கிளை திறக்க திட்டம் போட்டு இருக்காங்க. எனக்கு சரக்கு பஞ்சம் இல்லாம கிடைக்கும்."
"எனக்கு மருதாணி ரொம்ப பிடிக்கும்ங்க. அது அங்க கிடைக்காதே."
"ஹஹஹா! அந்த கிரகமே சிகப்பு கிரகம்தான். அந்த மண்ணுல விழுந்து உருண்டா நீ நல்லா சிகப்பா ஆகிடுவ. அப்புறம் எதுக்கு மருதாணி?"
"சரிங்க! நான் செவ்வாய் கிரகம் வர சம்மதிக்கிறேன். நம்ம முதல்வரும், கலைஞருமே அங்க கிளம்பி வரும்போது எனக்கு என்ன?"
"என்னது முதல்வரும், முன்னாள் முதல்வரும் அங்க வராங்களா? என்னடி சொல்ற?"
"ஆமா. இன்னைக்கு நீங்க பேப்பர் படிக்கலையா? அவங்க ரெண்டு பேரும் அங்க வந்து கட்சி ஆரம்பிக்க போறாங்களாம்."
"அட பாவமே! அப்போ நம்ம ட்ரிப் கேன்சல்"
No comments:
Post a Comment