"ஏம்பா! நீ ரஜினி ரசிகன்னு சொல்றியே. அது என்ன ராமதாஸ் மேல போட்ட ரஜினி ரசிகர்களை தாக்கின வழக்கு?"
"அது நடந்து ஒரு பத்து வருசம் இருக்கும்ணே. எனக்கும் ரொம்ப விசயம் நினைவுல இல்ல. எனக்கு தெரிஞ்ச அளவு சொல்றேன். அப்போ தினமலர்ல இது பெரிய நியூஸா வந்துச்சு."
"சரி சொல்லு"
"பாபா படம் வந்தப்ப ராமதாஸ் ரஜினிய எதித்து அறிக்கை விட்டதும், அப்புறமா பாபா பட பெட்டியை பாமககாரங்க கடத்துனதும் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்"
"ஆமா"
"இது நடந்து கொஞ்ச நாள்ல ராமதாஸ் பிரசாரத்துக்கு மதுரைக்கு வந்தார். உங்களுக்குத்தான் மதுரை ரசிகர்களை பத்தி தெரியுமே. ரஜினி பாஷைல சொன்னா அவங்க வெறியங்க. ராமதாஸ் மதுரை வரது தெரிஞ்சதும் ராமதாஸ்க்கு கறுப்பு கொடி காட்ட முடிவு செஞ்சாங்க."
"ஆமா. நானும் மதுரை ரசிகர்களை பத்தி கேள்வி பட்டு இருக்கேன். ரஜினின்னா உசுரை விடுவாங்களாமே"
"ஆமாண்ணே. அவங்க திட்டப்படி ராமதாஸ் வந்தபோது கறுப்பு கொடி காட்ட திரண்டு வந்துட்டாங்க. பாமககாரங்க இதை ஏற்கனவே எதிர் பாத்து இருப்பார் போல.ராமதாஸ் கூட வந்த ஆட்கள் அரிவாள், ப்ருஸ் லீ வச்சு இருப்பாரே நுஞ்சக் இது மாதிரி ஆயுதங்கள கையோட கொண்டு வந்து இருக்காங்க"
"பின்ன என்ன? கறுப்பு கொடி காட்டுனா பொறுத்துக்க ராமதாஸ் என்ன காந்தியா? "
"அது சரிதான். வந்தவங்க ரஜினி ரசிகர்களை கைல வச்சு இருந்த ஆயுதத்தால விரட்டி விரட்டி தாக்கி இருக்காங்க. இதுல 'ரஜினி' வைரம் அப்படிங்குற ரசிகர் மிக மோசமா தாக்கப்பட்டு இருக்கார். இதெல்லாம் தினமலர்ல பெரிய அளவு படங்களோட வந்துச்சு."
"இதெல்லாம் ரஜினி கண்டுக்கவே இல்லையா?"
"சே சே! தலைவர் ரொம்ப கோபமா பேட்டி குடுத்தார். . அந்த பேட்டில அவர் சொல்லி இருந்த குறிப்பிடத்தக்க விஷயம் என்ன தெரியுமா?"
"எனக்கு தெரிஞ்சா நான் ஏன் உன்கிட்ட கதை கேட்க வரேன்"
"இந்த கேஸை தான் விடுற மாதிரி இல்லை அப்படின்னு சொல்லி இருந்தார்."
"ஓஹோ"
"அது மட்டும் இல்ல. தாக்கபட்ட ரசிகர்களை சந்திக்க மதுரை வர இருந்ததாகவும் ஆனா அதுனால
ரசிகர்கள் பாமககாரங்க மேல ரொம்ப ஆவேசப்படுவாங்க. நிலைமை ரொம்ப மோசமடையும்னு
நினைச்சு அந்த யோசனைய கைவிட்டதாகவும் கூட கேள்விபட்டேன்"
"அப்படியா?"
"ஆமா. ஆனா ரஜினி சொன்ன விசயம் எனக்குள்ள ரொம்ப நாளா இருந்துட்டே இருந்துச்சு. அந்த கேஸ் என்ன ஆச்சுன்னு எவ்வளவோ நாள் யோசிச்சு இருக்கேன். தலைவர் அந்த கேஸை கை விட்டுட்டார் அப்பிடின்னு நெனச்சேன் . ஆனா இப்போ என்னோட கேள்விக்கெல்லாம் பதில் கிடைச்சுடுச்சு. அன்னைக்கு சூழ்நிலைல ஆட்சில இருந்த அதிமுகவுக்கு ராமதாசை விட ரஜினிதான் பெரிய எதிரி. அதனால போலீஸ் அந்த கேஸ் மேல இன்ட்ரெஸ்ட் எடுத்துக்காம இருந்து இருக்கு . போலீஸ் ஒத்துழைக்காம ரஜினியால என்ன செய்ய முடியும். கடைசில அந்த வஷயமே அடி வாங்குனவங்க தவிர எல்லாருக்கும் மறந்து போச்சு."
" அப்போ போலீஸ் இன்னைக்கு தேவைன்னதும் எல்லாரும் மறந்து போன ஒரு விஷயத்தை திரும்ப தூசி தட்டி எடுத்து இருக்காங்க"
"ஆமா! இதை பார்த்ததும் தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிச்சே ஆகணும்னு நம்ம முன்னோர்கள் சொன்னது ஒரு வேளை சரியா இருக்கும்னு சந்தேகம் வருது."
"சரியா கூட இருக்கலாம்"
"ராமதாஸ் ரஜினி மேல சொன்ன குடுத்த ப்ராது என்னன்னா இவரு தண்ணி அடிக்கிற மாதிரி நடிக்கிறார். சிகரட் குடிக்கிற மாதிரி நடிக்கிறார். இதை பாத்து இவரோட ரசிகர்கள் கெட்டு போறாங்கன்னு. ஆனா யோசிங்க. சிலர் ரஜினிய பாத்து சிகரட் குடிச்சது உண்மைதான். ஆனா சிகரட் குடிக்கிறவங்க அவங்களுக்கு அவங்களே கெடுதல் செய்றாங்களே தவிர சமூகத்துக்கு கெடுதல் பண்ணல. அதே நேரத்துல ரஜினி சினிமால எத்தனையோ நல்லது சொல்லி இருக்கார். எல்லா ஜாதி, மதத்தினரையும் அவரோட ரசிகரா மாத்தி ஏதோ ஒரு வகைல அவங்களை சேத்து வச்சு இருக்கார். எப்பவும் ஒரு குறிப்பிட்ட ஜாதி ஆளா தன்னை காமிச்சுகிட்டு நடிச்சது இல்ல. இப்பிடி எல்லாரையும் சேத்து வைக்கிற ரஜினி சமூகத்துக்கு கெடுதல் செய்யுறாரா? இல்ல ஒரு ஜாதி பேரு சொல்லி குறுகிய வட்டத்துல அரசியல் பண்ற ராமதாஸ் சமூகத்துக்கு கெடுதல் செய்யுறாரா? சொல்லுங்க அண்ணே?"
"ஆமாம்பா! அதுலயும் பஸ் மேல எல்லாம் கல்லு விட்டு எறிஞ்சு ஒருத்தரை கொலை கூட செஞ்சாங்க. அதை மன்னிக்கவே கூடாது"
"ஆமா. அதை மன்னிக்கவே கூடாது. நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. ரஜினி சமூகத்துக்கு கெடுதல் செய்யுறாரா? இல்ல ராமதாஸ் சமூகத்துக்கு கெடுதல் செய்யுறாரா?"
"போப்பா. நான் பதில் சொன்னா என்னை ரஜினி ரசிகன்னு சொல்லிடுவீங்க. புத்திசாலித்தனமா ரெண்டு பேருமேன்னு பதில் சொல்ல என் மனசாட்சி ஒத்துக்காது "
"சரி நீங்க சொல்ல வேண்டாம். இதை படிக்கிற அண்ணே. நீங்களாச்சும் சொல்லுங்க. ரஜினி சமூகத்துக்கு நல்லது செய்யுறாரா? இல்ல ராமதாஸ் சமூகத்துக்கு நல்லது செய்யுறாரா?"
patha vaichuttiiya paratta
ReplyDeleteஹா ஹா ஹா! அதெல்லாம் இருக்கட்டும். நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. ரஜினி சமூகத்துக்கு நல்லது செய்யுறாரா? இல்ல ராமதாஸ் சமூகத்துக்கு நல்லது செய்யுறாரா?
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஅந்த கமெண்டும் இருந்தா தானே தரத்த அறிய முடியும்.
Deleteசரக்கே இல்ல.தரத்த எப்படி தெரிஞ்சுக்கறது
Deleteஇது எனக்கும் கமெண்ட் போட்டவருக்கும் உள்ள டீலிங் நண்பரே! என்னுடைய பதிலை அவருக்கு மட்டும் தெரிய செய்வதே என் நோக்கம். ஆனால் அதை அனைவருக்கும் தெரிய செய்து விட்டேன். இப்போது தவறை சரி செய்து விடுகிறேன்.
Deleteநல்ல ஒப்பீடு . நன்றி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
Deleteஇரண்டு பேரும் சமுதாயத்துக்கு கெடுதலே செய்கிறார்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
Delete//* சிலர் ரஜினிய பாத்து சிகரட் குடிச்சது உண்மைதான்.*//
ReplyDeleteஇன்று இந்தியாவில் வெண்சுருட்டு முதாலன பொருட்களை பயன்படுத்துபவர்களில் 55% பேர் திரைப்படங்களைப் பார்த்துதான் கத்துகிட்டாங்கனு ஒரு ஆய்வு தெரிவிக்கிறதா முன்னால் மத்திய அமைச்சர் அன்புமணி தெரிவிச்சிருக்கிறார்.
//* ஆனா சிகரட் குடிக்கிறவங்க அவங்களுக்கு அவங்களே கெடுதல் செய்றாங்களே தவிர சமூகத்துக்கு கெடுதல் பண்ணல. *//
புகைப்பிடிப்பதால், அதை பிடிப்பவரை விட அவரை சுற்றியுள்ளவர்களுக்குதான் பாதிப்பு அதிகம்னு எல்லொருக்குமே தெரியும். உங்களுக்கு எப்படி தெரியாம போச்சுனு எனக்கு தெரியல..
அன்புமணி சொன்னது உண்மைதான். ஒரு சர்வேயில் பலர் தாங்கள் ஸ்டைலுக்காக புகைப்பதாகவும் பெரும்பாலும் தாங்கள் ஷாருக், அமிதாபை பார்த்து புகைப்ப கற்று கொண்டதாகவும் தெரிவித்து இருந்தனர். அதாவது அவர் குறிப்பிட்டு இருந்தது தமிழகத்தில் மட்டும் எடுக்கப்பட்ட சர்வே இல்லை. அதனால் ரஜினியால் புகை பிடிக்க ஆரம்பித்தவர்கள் சிலரா, பலரா என உறுதியாக குறிப்பிட முடியாது.
Deleteஒருவர் புகை பிடிக்கிறார் என்றால் அவரால் மொத்தமாக பாதிக்கப்படும் பேசிவ் ஸ்மோகர்கள் அதிக பட்சம் எத்தனை பேராக இருக்க முடியும். அவர் குடும்பத்தினர் ஒரு இரண்டு பேர் இருக்கலாம். நண்பர்கள் ஒரு இரண்டு பேர் இருக்கலாம். பொது இடத்தில் புகை பிடிக்கும்போது சிலர் மிக குறைந்த அளவு பாதிப்பை அடையலாம். ஆக பார்க்க போனால் இறுதியில் பாதிக்கப்படும் பேசிவ் ஸ்மோகர்கள் எண்ணிக்கை மிக குறைவே. அதை ஒட்டு மொத்த சமூகம் அடையும் பாதிப்பாக என்னால் எண்ண முடியவில்லை.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
Rajni better
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
DeleteRajni 0.0000001 % better
ReplyDelete