ஃபேஸ்புக் யூஸ் பண்றது போதை பழக்கத்தை விட மோசமானதுன்னு ஒரு நியூஸ் படிச்சேங்க. அது என்னவோ எனக்கு உண்மைதான்னு தோணுதுங்க. இப்போல்லாம் நம்ம ஆளுங்க இருக்காங்களே காலைல பல்லு விளக்க மறந்தாலும் ஃபேஸ்புக் ஓபன் பண்ண மறக்குறது இல்ல. விடிஞ்சதும் 'குட் மார்னிங்' அப்பிடின்னு ஸ்டேடஸ் போடுறது. அப்புறம் ப்ரண்ட் கிட்ட ஓசி வாங்குன ஒரு ஓட்டை கூலர்சை மாட்டிகிட்டு எடுத்த போட்டோவை அப்லோட் பண்றது. இப்பிடி விடிஞ்சதுல இருந்து தூங்குறவரை ஃபேஸ்புக்ல இவங்க செய்யுற அலம்பல் இருக்கே. தாங்க முடியாது.
அதுல சில பேரு இருக்காங்க. கூட படிக்கிற பொண்ணு, வேலை செய்யுற பொண்ணு பேரெல்லாம் போட்டு தேடி ஃப்ரண்ட் ரிகஸ்ட் குடுக்குறது இவங்க முழு நேர வேலை . அந்த பொண்ணு அச்செப்ட் பண்ணிட்டா . அப்புறம் அந்த பொண்ணு மூஞ்சி கூட கழுவாம போட்டோ எடுத்து போட்டாலும் "யூ ஆர் ஸோ கியூட்", "நைஸ் ஸ்மைல்" அப்பிடின்னு கமெண்ட் தருவாங்க. இந்த மாதிரி ஆளுங்களை நம்பித்தான் பொண்ணுங்க ஃபேஸ்புக்ல போட்டோ போடுறதே. அப்புறம் பொண்ணுங்க யாரும் சாட்டிங் கிடைச்சுட்டா இவங்களுக்கு ஒரே குஷிதான். மொக்கை போட்டே அந்த பொண்ணை சாகடிச்சுடுவாங்க
இந்த பொண்ணுங்களையும் சும்மா சொல்ல கூடாது. ரொம்ப போர் அடிச்சா 'இன்னைக்கு என் தலைல இருந்து ரெண்டு பேன் எடுத்தேன் ' அப்பிடின்னு ஒரு ஸ்டேடஸ் போட்றுவாங்க. அன்னைக்கு நாள் முழுசும் பசங்க போடுற கமெண்டை படிச்சே பொழுதை ஓட்டிடுவாங்க . ஃபேஸ்புக்ல போட்டோ போட்டுட்டு, யாரு போட்டோவுக்கு லைக்ஸ் ஜாஸ்தி விழுதோ அவங்கதான் பெரிய அழகின்னு சில பொண்ணுங்க அழகி போட்டி வேற நடத்துறதா கேள்வி.
அப்புறம் ஃபேஸ்புக் போராளிகள். அன்னைக்கு பேப்பர்ல முதல் பக்கம் வர்ற நியூஸ் மட்டும் பாத்துப்பாங்க. அதை மட்டும் வச்சுக்கிட்டு ஃபேஸ்புக் ஸ்டேடஸ்ல அறிக்கை விடுவாங்க பாருங்க. மன்மோகன்சிங்ல இருந்து பக்கத்துக்கு வீட்டுக்காரன் வரைக்கும்ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டாங்க.பெரும்பாலும் இவங்க கருத்துகள்ல ஆவேசம் பொங்கும். எல்லாரையும் கண்டபடி திட்டியும் குறை சொல்லியும் எழுதுவாங்க . யாராவது இவங்க கருத்தை தப்புன்னு சொல்லி கமெண்ட் போட்டா இவங்களுக்கு வருமே கோவம். கமெண்ட் போட்டவனை இனிமே ஃபேஸ்புக் பக்கமே திரும்பி பாக்க வைக்க முடியாத அளவு காய்ச்சி எடுத்துடுவாங்க.
அடுத்த வகை மக்கள் விஜய், அஜித், சூர்யா ரசிகர்கள். ஒவ்வொரு நடிகரோட ரசிகனும் அடுத்த நடிகரை படிச்சாலே கண்ணு கூசுற அளவுக்கு நல்ல வார்த்தைகளாலே அர்ச்சனை செய்வாங்க. எப்படியோ இது நாள் வரைக்கும் சுவத்துல ஒட்டுன போஸ்டர்ல சாணி அடிச்ச சமூகம் இன்னைக்கு கம்ப்யூட்டர் மானிட்டர்ல சாணி அடிக்கிற அளவு முன்னேறி இருக்கிறது நல்ல வளர்ச்சிதான்.
அப்புறம் இன்னும் ஒருத்தரை பத்தி சொல்ல மறந்துட்டேனே. அவர்தான் நம்ம அரசியல் சாணக்கியர். நம்ம ஃபேஸ்புக் சமூகம் பத்தி சரியா தெரியாம ஒரு பேஜ் ஓபன் பண்ணிட்டார். பாராட்டு வந்து குவிய போகுதுன்னு நெனைச்சவருக்கு முதல் நாள்லயே அதிர்ச்சி . இப்போ அவரை கழுவி கழுவி ஊத்துற கமெண்ட்ஸ்லாம் டெலிட் பண்றதுக்கே தனியா ரெண்டு பேரை வேலைக்கு வச்சு இருக்கிறதா கேள்வி. இப்பிடி சாணக்கியரையே தடுமாற வச்சுட்டாங்க நம்ம ஆளுங்க.
இப்படி சொன்னா எவ்வளவோ சொல்லிட்டே போகலாமுங்க. இருந்தாலும் ஃபேஸ்புக்ல சில அப்டேட்ஸ் எல்லாம் போட வேண்டிய வேலை இருக்கு. ஸோ முடிச்சுகிறேங்க.
No comments:
Post a Comment