புதுசாவும், கலர் ஃபுல்லாவும் .நிகழ்ச்சி தரதுல விஜய் டிவியை அடிச்சுக்க தமிழ்ல வேற சேனலே இல்ல. இந்த மேட்டர் அவங்க ஜோடி நிகழ்ச்சி பத்தினது. இதை எழுதலாமா வேணாமான்னு ஒரு குழப்பம். இருந்தாலும் எழுத வேற மேட்டர் இல்லை. அதனால இதையே எழுதலாமுன்னு முடிவு பண்ணிட்டேன்.
நேத்து டிவில அந்த ஜோடி நிகழ்ச்சில ரொமான்ஸ் ரவுண்டாம். ஆடுன ஜோடிங்கல்லாம் கட்டி உருளாத குறைதான். அட அவங்களாவது பெரியவங்க, பக்குவப்பட்டவங்க பரவாயில்லன்னு விட்டுடலாம் . அதுல ர ஃபிக்-காப்ரியல்ங்குற ஜோடில ரெண்டு பேருக்குமே முழுசா 16 வயசு கூட இருக்காது. அவங்க ரெண்டு பெரும் ஒருத்தரையொருத்தர் தொட்டு தொட்டு ஆடிட்டு இருக்காங்க. அந்த பொண்ணு முகத்துல அப்பிடி காதல் உணர்ச்சிகளை காட்டுது. நல்ல வேளை, பெரியவங்க ஆடுனத விட மூவ்மெண்ட்ஸ் கொஞ்சம் டீசன்ட்தான்.
இப்பிடி சின்ன பசங்களை வச்சு ப்ரோக்ராம் நடத்துறதை எல்லாம் குழந்தை தொழிலாளிகள் லிஸ்ட்ல சேக்க முடியாதா?. இதை டிவில காமிச்சா இதெல்லாம் தப்பு இல்லன்னு மக்கள் மனசுல பதியாதா? குறைஞ்ச பட்சம் கீழ 'இந்த நிகழ்ச்சியால் உங்கள் மன நலம் பாதிக்கப்படலாமு'ன்னு கீழ எச்சரிக்கை வாசகமாச்சும் காமிக்க சொல்லணும்.
எனக்கு என்ன பயம்னா நாளைக்கு 'ஜோடி ஜூனியர்'னு புது நிகழ்ச்சி ஆரம்பிச்சு சின்ன பசங்களையா ஆட விட்டுடுவாங்களோன்னு. அப்புறம் கொஞ்ச நாள்ல கோபிநாத் 'சீரழியும் இளைய சமுதாயம். காரணம் யார்?' அப்பிடின்னு 'என் தேசம் என் மக்கள்' நிகழ்ச்சி நடத்துறதை நாம பாக்க வேண்டி வரும். அப்புறம் இதே மாதிரி ஒரு ஹேர் ஆயில் விளம்பரம். ஒரு ஸ்கூல் பொண்ணை ரெண்டு ஸ்கூல் பசங்க கமெண்ட் அடிச்சுகிட்டே ஃபாலோ-அப் செஞ்சுகிட்டே போறாங்க. எனக்கு என்னமோ இதெல்லாம் நல்லதா படல.
எல்லாம் trp க்கு தான் .இந்த நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்கள் முதுகில் பெண் போட்டியாளர்கள் உக்கார்ந்து செய்த சாகசங்களை பார்க்க வில்லையா அன்பரே
ReplyDeleteஅதையும் பார்த்தேன் நண்பரே. இருந்தாலும் சிறுவர்களை ஆட செய்ததுதான் பொறுத்து கொள்ள முடியவில்லை
Deleteஅடடா...பார்க்காம போயிட்டேனே..,,
ReplyDeleteஎப்படியும் மீண்டும் ஒளிபரப்புவார்கள். தவற விடாமல் பார்க்க வாழ்த்துகள் நண்பரே :)
Deleteyoutubeல் தேடினால் கிடைக்கும்.
Deleteagreed........
ReplyDeletethank you sir
DeleteI am also agreed with your articles.
ReplyDeletethank you sir
DeleteThis is the truth sir. I have been thinking about this for long time. என்ன சொல்ல பூனைக்கு யார் மணி கட்டுவது. இத பத்தி நம சொன்ன நம்மக்கு culture தெரியலைன்னு சொல்லுவாங்க. விஜய் டிவிக்கு பிசினஸ் தவிர பெருசா எந்த கொள்கையும் கிடையாது.
ReplyDeleteThis is the truth sir. I have been thinking about this for long time. என்ன சொல்ல பூனைக்கு யார் மணி கட்டுவது. இத பத்தி நம சொன்ன நம்மக்கு culture தெரியலைன்னு சொல்லுவாங்க. விஜய் டிவிக்கு பிசினஸ் தவிர பெருசா எந்த கொள்கையும் கிடையாது.
ReplyDelete