சில சந்தேகங்கள் எப்போதும் நம் மனதை அரித்து வரும். ஆனால் அதை யாரிடம் கேட்பது என்று தெரியாது. அப்படி என் மனதில் உள்ள சந்தேகங்கள் இவை. உங்களுக்கு தெரிந்தால் பதில் சொல்லுங்களேன்.
மனிதனால் எத்தனையோ உயிரினங்கள் உலகிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் மனிதனால் கொசுக்களை மட்டும் அழிக்க முடியவில்லையே ஏன்?
மைலாப்பூரில் பிறந்த வள்ளுவர், மதுரையில் திருக்குறள் அரங்கேற்றம் செய்தார் என்கிறார்களே. அந்த காலத்தில் வள்ளுவர் எந்த ரூட்டில் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்திருப்பார்?
கமலஹாசன் எந்த மேடையில், எந்த விழாவில் பேசினாலும் ஏன் சம்பந்தமே இல்லாமல் பகுத்தறிவு பேசுகிறார்?
சிறு வயதில் விரைவாக பெரியவராக ஆசைப்படுகிறோம் . பெரியவர் ஆன பின் சிறுவராகவே இருந்திருக்கலாமா என நினைக்கிறோம். இது ஏன்?
தமிழில் இப்போது அதிக நகைச்சுவை படங்கள் வருவதற்கும், வடிவேலு இப்போது சினிமாவில் நடிக்காமல் இருப்பதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?
ஸ்பாட் பிக்சிங்கில் பெரும்பாலும் பௌலர்களே சிக்குகிறார்களே. பேட்ஸ்மேன்களை வைத்து ஸ்பாட் பிக்சிங் செய்ய முடியாதா?
கல்லூரிகள் தங்கள் விளம்பரங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி விடுதிகள் என்று விளம்பரம் செய்கிறார்களே. ஆண்களையும், பெண்களையும் ஒரே விடுதியில் தங்க வைக்கும் கல்லூரி இந்தியாவில் எங்கேயும் இருக்கிறதா?
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட். கை வலிக்க எழுதி நான் போஸ்ட் செய்யும் பதிவுகளை யாராவது முழுவதும் படிக்கிறீர்களா?
எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு
ReplyDelete