Monday, May 27, 2013

ஒரு பயங்கர பேய் கதை

"அண்ணே! இந்த பேய், பிசாசு இதெல்லாம் இருக்கா?"

"அதெல்லாம் இருக்குப்பா"

"ஏதோ நேர்ல பாத்த மாதிரி சொல்றீங்க"

"ஆமா. நான் நேர்ல பாத்து இருக்கேன்"

"என்னண்ணே சொல்றீங்க! நீங்க எப்போ பேய பாத்தீங்க? எங்க பாத்தீங்க?"

"இதே ஊருல. அப்போ எனக்கு ஒரு 18 வயசு இருக்கும். நம்ம ஊருல சேர்மன் ராமசாமி செட்டியார் பார்க் இருக்குல. அங்கதான் அந்த ஆவிய பாத்தேன் "

"என்னண்ணேஆவிய பாத்தேன்னு ஏதோ அனுஷ்காவை பாத்த மாதிரி சொல்றீங்க"

"இரு உனக்கு அந்த கதைய சொல்றேன். கதை சொல்லும்போது குறுக்க பேசாதே."

"சரி சொல்லுங்க"

"எனக்கு அப்போ 18 வயசு. ராமசாமி செட்டியார் பார்க்ல தூக்குல தொங்குன ஒரு பொண்ணு அங்கேயே மோகினியா சுத்துறானு ஒரு பேச்சு அப்போ ஊருக்குள்ள இருந்தது. அதுவும் அந்த பேய் சின்ன வயசு ஆம்பளைங்களை பாத்தா அப்படியே ஒரு அறை கொடுக்கும். அந்த அறைய வாங்குனவன் இரத்தம் கக்கி சாக வேண்டியதுதான்னு எல்லாரும் நம்புனாங்க"

"ஆமாண்ணே! இப்போ கூட அந்த ஏரியால நைட்  8 மணிக்கு மேல ஆள் நடமாட்டமே குறைஞ்சிடும்"

"ஷு! கதைய மட்டும் கேட்கணும்."

"சரி சரி சொல்லுங்க"

"அந்த வயசுல எனக்கும் உன்னை மாதிரியே பேய், பிசாசுல நம்பிக்கை இல்ல. ஒரு நாள் ராத்திரி சினிமா பாத்துட்டு வரும்போது வேணும்னே அந்த வழியா போக முடிவெடுத்து அந்த வழியா போனேன் . ராத்திரி 1 மணிக்கு அந்த பார்க் கிட்ட யாருமே இல்ல. நான் கொஞ்சம் கூட பயம் இல்லாம பார்க் ரோடுல நடக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச கொஞ்சமா நடந்து பார்க் கிட்ட போனதும் என்னையும் அறியாம பார்க்ல யாரு இருக்கானு திரும்பி பார்த்தேன். அங்க அது இருந்துச்சு"

"என்னது அது. சீக்கிரம் சொல்லுங்க. எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு"

 
'அதாண்டா மோகினி. அதுக்கு வயிறு வரைக்கும் நாக்கு வெளியே தொங்கிட்டு இருந்துச்சு. அதோட ரெண்டு சிங்க பல்லும் வாய விட்டு வெளிய நீட்டிகிட்டு டிராகுலா பல்லு மாதிரி இருந்துச்சு . கருப்பு சேலை கட்டிக்கிட்டு அங்க பசங்க விளையாடுற ஊஞ்சல்ல உக்காந்து  ஆடிட்டு இருந்துச்சு. அது என்னை பாத்துடுச்சு"

"அய்யயோ! அப்புறம்"

"அதை பாத்ததும் நான் ஓட ஆரம்பிச்சேன். அது என்னை துரத்த ஆரம்பிச்சிடுச்சு. அன்னைக்கு பாத்து நான் புது செருப்பு வேற போட்டு இருந்தேன். அந்த செருப்பு காலை கடிச்சதுல என்னால வேகமா ஓட முடியல. பேய் என்னை நெருங்கிடிச்சு. இன்னும் ஒரு அடில என்னை பிடிச்சிடும். பிடிச்சுட்டா ஒரே அறைதான். புது செருப்பை கழட்டி போட்டு ஓடவும் எனக்கு மனசு வரல "

"அப்புறம்  என்னதான் ஆச்சு"

"இப்போ பேய் என் கிட்ட வந்து என் கூடவே ஓட ஆரம்பிச்சிடுச்சு. அறைய சரியான நேரம் பாத்து கைய ஒங்குது"

"என்னதான் செஞ்சீங்க"

"அண்ணன் யாரு. அன்னைக்கு நான் பாத்துட்டு வந்த படம் 'எண்ட்டர் தி டிராகன்'. ப்ருஸ் லீய மனசுல நெனைச்சுகிட்டு பேய் அறைய அறைய நான் என்னோட கைய வச்சு பிளாக் பண்ணேன்.அப்பிடியே ஒரு பத்து பன்ச்சை பிளாக் பண்ணி இருப்பேன். மோகினியால என்னை அறைய முடியல. அப்போ ஒரு சுவர் தெரிஞ்சிச்சு. அப்பிடியே ஒரே ஜம்ப்ல அதை தாண்டிட்டேன். அந்த பேய் புடவை கட்டி இருந்ததால சுவர் ஏறி குதிக்க முடியல. நான் தப்பிச்சுட்டேன். இதுதான் நான் பேய் பார்த்த கதை."

"யோவ்! நீயெல்லாம் ஒரு பெரிய மனுசன்னு நெனச்சு உன் கிட்ட சந்தேகம் கேட்டேன் பாரு. உன்னை பேயே அறைஞ்சு இருக்கலாம்."

19 comments:

 1. நல்லா இருந்துச்சி.. விறுவிறுப்பாவும் இருக்கு...

  ReplyDelete
 2. can i share this in my face book?

  ReplyDelete
 3. can i share this in my face book?

  ReplyDelete
 4. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 5. நான் இதை எனது வலைப்பூவில் வெளியிடலாமா ?

  ReplyDelete
  Replies
  1. தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் நண்பரே..facebookல் பகிர்வதை பற்றி எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் வலைப்பூவில் பகிர அனுமதிப்பதற்கு தயக்கமாக உள்ளது.

   Delete
  2. நன்றி. நான் FACE BOOK - ல பகிர்ந்துக்கறேன். உங்களோட ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப நேரம் சிரிச்சிட்டு இருந்தேன். நான் வலைபூவுல வெளியிட்டாலும் உங்களோட படைப்புன்னு சொல்லித்தான் வெளியிடறதா இருந்தேன். உங்களுக்கு பிடிக்கல அப்படிங்கறதால இப்போ நான் வலைப்பூவில் வெளியிடல. மிக்க நன்றி

   Delete
  3. புரிதலுக்கு நன்றி நண்பரே.. ஆனால் எனக்கு நீங்கள் வெளியிடுவது பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை. தினமும் ஒரு பத்து பேர் என் வலைப்பூவுக்கு வருகின்றார்கள் என்றால் அதற்கு காரணம் இந்த பதிவுதான். நம்பினால் நம்புங்கள். தினமும் தமிழ்நாட்டில் நிறைய பேர் பேய் கதைகள் என்று கூகிளில் தேடுகின்றனர். அவர்களுக்கு கிடைப்பது இந்த பதிவுதான் . இது போன்று வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து விடும் என்றுதான் தயங்குகின்றேன். நீங்கள் வேறு எந்த பதிவையும் கேட்டிருந்தால் நான் நிச்சயம் வெளியிட்டு கொள்ளுங்கள் என்று கூறியிருப்பேன்.

   Delete
  4. அதென்ன ரொம்ப பிடிச்சிருக்கு?? புரியவில்லை.

   Delete
  5. நீங்க சொல்ல வந்தது இப்போ எனக்கு புரியிது. மிக்க நன்றி. நான் என்னோட facebook - ல வெளியிட்டிருக்கேன்.

   மன்னிக்கவும்.டைப் பண்ணும்போது ஒரு சொல் விடுப்பட்டு போயிருக்கு போல. உங்களோட பதிவுகள் ரொம்ப பிடிச்சிருக்குன்னு டைப் பண்ண போய் உங்களோட ரொம்ப பிடிச்சிருக்குன்னு ஆயிடுச்சி. அவ்ளோதான்.

   மிக்க நன்றி.

   Delete
  6. அதுலயும் இந்த கதை, சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணியே வந்திடுச்சி.

   Delete
  7. நன்றி நண்பரே :)

   Delete
 6. Replies
  1. இது ஏற்கனவே பல தளங்களில் பலவாறு பகிரப்பட்டு விட்டது. நீங்களும் வேண்டுமானால் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆனால் என் வலைப்பூவின் பெயரையும் குறிப்பிட்டு பகிர்ந்தால் மிகவும் மகிழ்வேன்.

   Delete
 7. ஹா..ஹா..ஹ...செம காமெடி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது, சூப்பர்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...