Saturday, February 23, 2013

ஆதிபகவன் பாத்துட்டேன் !

 முன்குறிப்பு: இது முழுக்க முழுக்க படம் பற்றிய என் பார்வையே. எனக்கு எந்த சினிமா நுணுக்கமும் தெரியாது. படத்தை நான் எப்படி புரிந்து கொண்டேனோ அதையே எழுதுகிறேன்.

"சுதா! ஆதிபகவன் படம் பாக்க போறேன்னியே. பாத்துடியா?"

"பாத்துட்டேன்டா"

"அடி பாவி! 'A' படம் வந்த முதல் நாளே போய் பாத்துடுவ போல"

"டாய்! படம் டைட்டில்லயும் சென்சர் செர்டிபிகேட்லயும் தன் 'A இருக்கு. ஒரு சீன்ல கூட 'A' இல்ல. 10 வயசு பையன் நெட்ல  பலான படம் பாக்குற காலத்துல இதுக்கு ஏன் 'A ' னு புரியல "

"வயலன்ஸ் ஜாஸ்தின்னு 'A' குடுத்து இருப்பாங்கடி"

"பாஸ்! இது வயலன்ஸ்னா  விஸ்வரூபம் படத்தை என்னனு சொல்றது"

"சரி படம் எப்புடி இருந்துச்சு சொல்லு"

"நீ எப்பவாச்சும் யோசிச்சு இருக்கியாடா? பாட்ஷால கமலும்   மகாநதில  ரஜினியும் நடிச்சு இருந்தா எப்புடி இருக்கும்னு?"

"இதுல யோசிக்க என்ன இருக்கு? நல்லாவே இருந்து இருக்காது."

"அதேதான் இதுலயும். ரவிக்கு ரோல் கொஞ்சமும் செட் ஆகல. நல்ல நடிகர் தான். கஷ்டபட்டு நடிச்சும் இருக்கார் ஆனா ஸ்டைலிஷா நடிக்க வரல அவருக்கு. ஆனா படம் பில்லா மாதிரி ஸ்டைலிஷா ட்ரை பண்ணி இருக்காங்க. சுத்தமா மேட்ச் ஆகல."

"ஹ்ம்ம். கதை என்ன."

"சும்மாவே படம் முழுசும்  guess பண்ற மாதிரி சீன்தான். இதுல கதையையும் சொல்லிட்ட அவ்ளோதான். ஆனா படம் கொஞ்சம் சமர் படத்தை நியாபக  படுத்துது "

"அப்புறம்"

"என்ன  நீத்து பத்தி சொல்லணுமா?"



"ஆமா. அதானே முக்கியம். நல்ல அழகுல அந்த பொண்ணு"

"நீ பொம்பள கழுதையை பாத்தாலும் அழகா இருக்குனு சொல்றவனாச்சே. நல்ல கேரக்டர் கெடச்சு இருக்கு  அந்த பொண்ணுக்கு. கஷ்டப்பட்டு செஞ்சு இருக்கு. குறை சொல்ல முடியாது. ஆனாலும்  என்ன யூஸ்"

"பாட்டுக்கெல்லாம் நல்ல ஆடி இருக்கா? கன்னி தீவு பொண்ணா மாதிரி"

" பாட்டேல்லாம் ரொம்ப சுமார் .பாட்டுவரப்ப எல்லாம் முன் சீட்டு பையன பாத்துட்டு இருந்தேன் . பின்னணி இசை  நல்லா இருக்குது  பெரிய பில்ட்-அப் எல்லாம் குடுக்குது. ஆனா முன்னாடி ஓடுற சீன் எல்லாம் பத்தல.  அமீர் அதிரடி ஆக்சன் படம் குடுக்க பாத்து இருக்கார். விறுவிறுப்பா இருக்கும்னு நெனச்சு சீன் வச்சி இருக்கார். ஆனா எதிர் பாத்த மாதிரி வரல. பருத்தி வீரன் குடுத்த டைரக்டர் கிட்ட இருந்து இந்த மாதிரி ஒரு படம் வரும்னு எதிர் பார்க்கல"

 "அப்பிடினா படம் குப்பையா?"

"சே சே. அப்பிடி இல்ல. ரொம்ப மோசம்னும் சொல்ல முடியாது. ஒரு வேலை அஜித் நடிச்சு இருந்தா பெரிய ஹிட் ஆகியும் இருக்கலாம் "

 "சரி சுதா! நான் உத்தரவு வாங்கிகிறேன்"

"எங்க போற? ஆதிபகவன் பாக்கவா?"

"இல்ல. படம் மெதுவா பாத்துக்குறேன். இபோ வேற வேலை இருக்கு. bye"

"bye "


 விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Friday, February 22, 2013

விஸ்வரூபம் - ஒரு ஓர பார்வை

 "டாய் அகில்! விஸ்வரூபம் போனியே. படம் எப்பிடி?'

"டாகுமெண்டரி படம் காமிச்சு ஏமாத்திட்டாங்க சுதா "

"அட பாவி! 95 கோடி போட்டு எடுத்த படமாண்டா "

"என்னது 95 கோடியா?? சத்தியமா சொல்றேன். டைட்டில் மட்டும் போடாட்டி நியூஸ் ரீல் ஓடுதுன்னு நெனச்சு இருப்பேன்"

"உன் டேஸ்டுல மண்ணை அள்ளி போட..உனக்கெல்லாம் அலெக்ஸ் பாண்டியன் தான் லாயக்கு!"

"ஆமாண்டி! பூஜா குமாரை கொஞ்சம் அட விட்டு இருந்தா படம் எனக்கு பிடிச்சு இருக்குமோ என்னவோ ?"

"ஜொள்ளு விட்டுடே திரிடா"



 அது இருக்கட்டும் சுதா. உங்க ஆளு ஏன் எப்பவும் புரியாத மாதிரியே பேசுறாரு"

"புத்திசாலிங்க எல்லாரும் அப்டிதாண்டா  பேசுவாங்க. அவர் பேசுறது புத்திசாலிங்க கிட்ட ரீச் ஆகும்."

"அப்போ அவரு ஹாலிவுட் போகட்டும். ஆனா அவரு அன்பே சிவம் ஹாலிவுட்ல எடுத்தா அவரை திருப்பி அனுப்பிச்சுட மாட்டாங்களா? ஒ! அவரு புத்திசாலி ஆச்சே! அங்க போன கம்யூனிஸ்ட்டை வில்லனா காமிச்சு படம் எடுப்பார் "

"டேய்! அவரால தமிழ் நாட்டுக்கே பெருமை தெரியுமா?"

 "சரி கோவிச்சுகாதடி! உண்மைய சொல்லணும்னா படம் ஒரு தடவை பாக்கலாம். சில சீன் நல்லாவே இருந்துச்சு. ஆனா இந்த படத்துக்கு எதுக்கு இவ்ளோ எதிர்ப்புன்னு புரியல "

"நீ முஸ்லிம் மாதிரி யோசி அகில். அவங்களுக்கு படம் பாத்தப்போ தப்பா தெரிஞ்சு இருக்கும்."

"நீதானே என் பொன் வசந்தம் பாத்திட்டு என் மனசு கூட கஷ்டமா போச்சு. படம் எடுத்து torture பண்ண கெளதம் மேல நான் கேஸ் போட்டேனா! இல்ல படத்தை ban செய்ய சொன்னேனா?"

"மொக்கை போடாதடா"

"படம் பாத்தப்போ பின்னாடி இருந்த ஒரு 15 வயசு பையன் அவங்க அப்பா கிட்ட சொன்ன review தான் என் review"

"............"

"என்னனு கேளு"

சொல்லி தொலை"

"படம் போரும் அடிகிது. நல்லாவும் இருக்கு"


விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரஜினியும் சச்சின் டெண்டுல்கரும்

"என்ன தலைப்புடா இது?" ரஜினிக்கும் டெண்டுல்கருக்கும் என்ன சம்பந்தம் என்று நினைகிறீர்களா? இருக்கிறது. இந்த இரு மராட்டியர்களும் பாதி தேசத்தை கட்டி போட்டவர்கள், என்னை மிகவும் கவர்ந்தவர்கள் என்பதை தவிர்த்து இன்ன பல விசயங்களும் உள்ளன. இவர்கள் வாழ்கையிலிருந்து எடுத்து கொள்ளவும் எவ்வளவோ உள்ளன.  

கடின உழைப்பு:



இவர்கள்  இருவரின் திறமை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. அனால் வெற்றி பெற திறமை மட்டும் போதுமா? நிச்சயம் இல்லை. ரஜினியை விட திறமையான திறமையான நடிகர்கள் உள்ளனர். வினோத் காம்ப்ளி தன்னை விட திறமையான ஆட்டக்காரர் என்று டெண்டுல்கரே கூறி உள்ளார். ஆனால் திறமையாலர்களால் இவர்கள் அடைந்த வெற்றியில் பாதியை கூட அடைய முடியவில்லையே. இவர்களின் நெருங்க முடியாத சாதனைகளுக்கு காரணம் என்ன? இவர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வுமே. டெண்டுல்கர் உலகின் சிறந்த ஆட்டக்காரர் என்று அனைவரும் ஓப்பு கொண்ட பின்னும் அதிக  நேரம் பயிற்சி எடுப்பவர். இந்திய சூப்பர் ஸ்டார் என்று ஆனா பின்னும் ரஜினி எந்திரனுக்காக பட்ட கஷ்டம் என்ன வென்று அறிவோம். தம் வேலையின் மேல் இவர்களுக்கு இருக்கும்  அதீத ஈடுபாடு இவர்களை இயக்குகிறது.

தோல்வியிலிருந்து மீள்தல்:



இவர்கள் அடைந்த வெற்றி மட்டுமே நமக்கு நினைவில் உள்ளது. ஆனால் இவர்கள் அடைந்த   தோல்விகளும் ஏராளம். ரஜினிக்கு சந்திரமுகியும் டெண்டுல்கருக்கு 2003 நியூசிலந்து தொடருக்கு பின்னான உலக கோப்பை தொடரும் ஒரு உதாரணம். இவர்களின் சிறிய தோல்விகளும் பெரிது படுத்த படுகிறது. இவர்கள் தோல்வி அடைந்தால் கொண்டாட ஒரு கூட்டமே உள்ளது. இருந்த போதிலும் இவர்கள்  தோல்வியிலிருந்து மீண்டு வந்த விதம் அலாதியானது. தங்கள் தகுதி  திறமை மேல் இவர்களுக்கு இருந்த அதீத நம்பிக்கையே இதற்கு காரணம்.

 - தொடரும்



விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...