Thursday, May 9, 2013

தோனி - ஒரு அதிசயம்

ங்குலி தலைமையில் பல வெற்றிகளை இந்திய அணி குவித்து வந்த காலம். அந்த அணிக்கு இருந்த மிக பெரிய பிரச்சனை சரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லாதது. பார்த்திவ், தினேஷ் கார்த்திக் என சில வீரர்களை முயன்றபோதும் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே ராகுல் டிராவிட் வேண்டா வெறுப்பாக விக்கெட் கீப்பிங் செய்து கொண்டு இருந்தார். கங்குலியோ, "இந்தியாவில் ஒரு கில்க்ரிஸ்டோ, மார்க் பவுச்சரோ இல்லை; எனவே டிராவிடே விக்கெட் கீப்பிங் செய்வார்"  என பேட்டி கொடுத்து கொண்டு இருந்தார். ஆனால் டிராவிட்டின்  விக்கெட் கீப்பிங் சொல்லி கொள்ளும்படி இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அணி வங்கதேசம் சென்றது. வழக்கமாக சிறிய அணிகளுடன் மோதும்போது புதிய வீரர்கள் அதிக அளவில் வாய்ப்பு பெறுவார்கள். அப்பொழுதும் அதே போல் அணியில் சில  புதுமுக வீரர்கள் வாய்ப்பு பெற்றார்கள். அப்பொழுது இந்திய A அணியில் அசத்தி கொண்டு இருந்த தோனியும் வாய்ப்பு பெற்றார். 

2004 ஆம் ஆண்டு தோனியின் முதல் போட்டி.  நீளமான முடி; இந்திய வீரர்கள் யாருக்கும் இல்லாத கட்டுமஸ்தான உருவம். பார்க்க மிகவும் வித்தியாசமாக இருந்தார்.  முதல் போட்டியில் ஒரு ரன்னும் எடுக்காமல் அவுட்.  அடுத்த போட்டியில் அவரின் பேட்டிங்கை பார்க்கும் வாய்ப்பு  கிடைத்தது. அந்த போட்டியில் சர்வ சாதாரணமாக ஒரு சிக்ஸர் அடித்தார். பின் சிங்க பல் தெரிய ஒரு சிரிப்பு. அவரின் உடல்  வலிமை கவனிக்க வைத்தது. ஆனால்  அவரின் பேட்டிங் ஸ்டைல் மிக மோசம் . சர்வதேச கிரிக்கெட் வீரர் போலவே இல்லை. இந்த பேட்டிங்  ஸ்டைலில் ஆடி சாதிப்பது சாத்தியமே இல்லை. அதிரடியாக ஆடினால் சில போட்டிகளில்  அதிக பட்சம் 30 அல்லது 40 ரன்கள் எடுக்கலாம்.  ஆனால் பெரிய ஸ்கோர், நம்பகமான ஆட்டம் எல்லாம் சாத்தியமே இல்லை என்று நினைத்தேன். நினைத்தது போலவே அந்த தொடரில் சுமாராகவே ஆடினார். டிராவிட்டின் தலைவலி எப்போதும் தீராது போலும் என்று எண்ணி கொண்டேன். 


அடுத்த தொடர் பாகிஸ்தானுடன். இந்த தொடருக்கு  அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை என  கொண்டேன். ஆனால் அவருக்கு வாய்ப்பு அளிக்க பட்டது. இளைஞர்கள் மேல் அதிக நம்பிக்கை வைத்த சாப்பல் ஒரு போட்டியில்  தோனிக்கு மூன்றாவது வீரராக களம் இறங்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போதைய இந்திய கிரிக்கெட்டின் வரலாறு எழுதப்பட்டது அந்த போட்டியில்தான். அந்த போட்டியில் நான்கும், ஆறுமாக அடித்து  அவர் அடித்த ரன்கள் 148. அந்த ஆட்டத்தை பார்த்த டிவி வர்ணனையாளர்களோ  தாங்கள் பார்ப்பது தோனியையா, இல்லை விவியன் ரிச்சர்ட்சின் புயல் வேக ஆட்டத்தையா என வியந்தனர். நானோ இது எத்தனை நாட்களுக்கு என பார்க்கலாம் என எண்ணி கொண்டேன். இந்த ஒரு போட்டியில் ஆடியதால் இன்னும் ஒரு ஆண்டுக்கு அணியில் இருப்பார் என்று எண்ணினேன். . ஆனால் அந்த ஆட்டத்தை முழுவதுமாகவும் என்னால் ஒதுக்கி விட முடியவில்லை. காரணம், அந்த போட்டியில் தோனி காட்டிய அட்டிடியுட். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்று எல்லா வீர்களுக்கும் இருக்கும் பயமோ, பதட்டமோ அவரிடம் சுத்தமாக இல்லை. சதம் எடுத்த பின்னும்  முதல் சதம் எடுத்த வீரரின் முகத்தில் இருக்கும் பூரிப்பு அவரின் முகத்தில் இல்லை. தான் எதுவுமே செய்யாதது போல சலனமற்ற முகத்தோடு அவ்வளவு இயல்பாக பந்துகளை நொறுக்கினார்.  

அதற்கு பின் இலங்கை தொடரில் அவர் அடித்த சதமோ அவரின் புகழை இன்னும் உயர்த்தியது. மின்னல் வேகத்தில் 183 ரன்களை குவித்து அந்த போட்டியில் பல  சாதனைகள் படைத்தார். எனக்கு  அந்த ஆட்டத்தை முழுவதும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  அவரின் ஓடி ரன் சேர்க்கும் வேகம், அசாத்திய பலம் இது எதையுமே என்னால் நம்ப முடியவில்லை. தோனியை நான்  முதல்முதலில் வியந்து பார்த்தது அன்றுதான்.

                                                                                                                                            தொடரும் 

 உங்களின் வரவேற்பை பொறுத்தே அடுத்த பகுதி எழுதுவது பற்றி முடிவு செய்வேன்


10 comments:

 1. மிக பெரிய திறமைசாலி .....நீங்களும் ....நிறைய எழுத வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பாஸ்! என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலியே

   Delete
 2. மிக பெரிய திறமைசாலி .....நீங்களும் ....நிறைய எழுத வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. தோணிய பற்றிய இன்னும் பல தகவல்களை ஆவலுடன் எதிர்பாக்குறேன்

  ReplyDelete
 4. எழுதுங்க பாஸ். டோனி ஒரு சூப்பர் ஹீரோ, அவரது வாழ்வில் பல திருப்பங்கள் வரும். அதையெல்லாம் எழுதுங்கள். அவரது பைக் சவாரி, அவர் சென்னை பெண் நண்பி, இப்படி பல விஷயங்களை கோர்வையாகப் படித்தால் நன்றாக இருக்கும். முகநூலில் பல ரெஃபரண்சுகள் உள்ளன.

  ReplyDelete
  Replies
  1. பாஸ்! உண்மையில் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை பற்றி மட்டுமே எழுத உள்ளேன். அதிலும் குறிப்பாக IPL பற்றி அதிகம் எழுதாமல் தவிர்த்து விடவே முடிவு செய்து உள்ளேன். தோனியை கண்டு நான் வியந்த தருணங்களை என் நினைவிலிருந்து எழுதுவதே என் நோக்கம்.

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...