Sunday, September 15, 2013

மோடி- மீட்பரா? ஹிட்லரா?

மோடிதான்  பிரதமர் வேட்பாளர்ன்னு பிஜேபி சொன்னதும் நாடே பரபரப்பு ஆயிடுச்சுங்க. மோடிய இந்தியாவ மீட்க வந்த மீட்பர்னு சிலரும், ஹிட்லர்ன்னு சிலரும் சொல்றாங்க. எல்லாத்தையும் கேட்டும், படிச்சும், கொஞ்சமா இருக்குற சொந்த புத்திய வச்சு ஆராய்ச்சி செஞ்சும் பார்த்தா கடைசில எந்த விடையும் கிடைக்கலை. புரிஞ்ச ஒரே ஒரு விஷயம் மோடியோட தலைமையை குறை சொல்ல வேற எந்த விஷயமும் இல்லாததால இந்த ஹிட்லர் கோஷத்தை வச்சுதான் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கப் போகுது.

இந்தியாவை பொருத்தவரைக்கும் நம்மகிட்ட நல்ல தலைவர்கள்னு சொல்ல ரொம்ப பேரெல்லாம் இல்ல. சுதந்திரம் வாங்கின காலத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் சுயநலம் இல்லாத சேவை மட்டுமே செய்ய அரசியலுக்கு வந்த தலைவர்களை விரல் விட்டு எண்ணிடலாம். இதுக்காக  யாரையும் குறை சொல்லிட முடியாது. காரணம் நம்ம கலாசாரமே அப்பிடி. நம்ம மக்களுக்கு அவங்க வேலை சரியா முடிஞ்சா போதும். அடுத்தவங்களை பத்தி எல்லாம் கவலை இல்லை. 
 

ஒரு தடவை   டிரெய்ன்ல டிக்கெட் பண்ணேன். அந்த டிரெய்ன் வேற ஒரு ஊருல இருந்து கிளம்புற டிரெய்ன். அது அந்த ஊருல இருந்து நான் புக் பண்ண ஸ்டேஷன் வரதுக்கு ரெண்டு மணி நேரம் ஆகும். நான் அந்த டிரெய்ன்ல ஏறி என்னோட பெர்த் போய் பாக்கும்போது பெர்த்ல எனக்குன்னு ஒதுக்குன தலகாணிய காணோம். கீழ படுத்துட்டு இருந்தவர்கிட்ட கேட்டா பக்கத்து பெர்த்காரர் அந்த தலகாணிய எடுத்து வச்சு இருக்கார் அப்பிடிங்கிறார். நான் அவரை எழுப்பி தலகாணிய  கேக்கலாம்ன்னு பார்த்தா அவர் போர்வையை நல்லா இழுத்து போத்திகிட்டு படுத்துகிட்டு இருக்கார். எப்பிடி எப்பிடியோ எழுப்பி பார்த்தும் கடைசி வரை போர்வையை விலக்கி எந்திரிக்கவே இல்லை. அப்புறம் என்ன செய்ய? கையை தலைக்கு வச்சுக்கிட்டு பட்டனத்தார் மாதிரி தூங்கிகிட்டு வந்தேன். இது நம்ம மக்களோட மனசுக்கு ஒரு உதாரணம்.

டிரெய்ன்  கதையை முடிச்சாச்சு. அடுத்து பஸ் கதை. ஒரு நாள் ஒரு ட்ராவல்ஸ்ல மதுரை வழியா போய்கிட்டு இருந்தேன். ட்ராவல்ஸ்காரன் விடியற்காலை நாலு மணிக்கு மதுரை சிட்டிக்குள்ள டீசல் போட வண்டிய நிறுத்துனான். உடனே வண்டில இருந்த நம்ம ஆளுங்க இறங்கி பக்கத்துல இருந்த பள்ளிக்கூட வாசல் கிட்ட சிறுநீர் கழிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவங்களுக்கு என்ன கவலை? அவங்க பிள்ளைங்கதான் அந்த பள்ளிகூடத்துல படிக்கலியே. பொதுவாவே நாம இப்பிடிதான். அடுத்தவங்களை பத்தி நமக்கு எந்த கவலையும் கிடையாது.

இப்போ மேல சொன்ன மாதிரி சின்ன விசயங்களை விட்டுடுவோம். அடுத்த கட்டத்துக்கு வருவோம். இந்த பெரும்  பணக்காரங்க இருக்காங்களே, அவங்களுக்கு யார் ஆட்சி பண்றாங்கன்னு பெரிய கவலை எல்லாம் இல்லை. அதனால அவங்களை விட்டுடுவோம். நம்ம மாச சம்பளம் வாங்குற மிடில் கிளாஸ் மக்களை எடுத்துப்போம். அரசியல்வாதிங்க சரி இல்லை, ஆட்சி சரி இல்லன்னு ஆயிரம் குத்தம் சொல்லுவாங்க. ஆனா இன்கம்டாக்சை குறைக்க என்னென்ன டூப்ளிகேட் பில் தர முடியுமோ அத்தனை பில்லையும் தருவாங்க. கேட்டா நாம இன்கம்டாக்ஸ் காட்டுனா எவனோ அமுக்க போறான்னு விளக்கம் தருவாங்க. இவங்க இவங்களால முடிஞ்ச அளவு அரசாங்கத்தை ஏமாத்துனா, அரசியல்வாதிங்க  அவனால முடிஞ்ச அளவு அரசாங்கத்தை ஏமாத்ததானே செய்வாங்க?

இப்பிடிப்பட்ட சமூக சூழ்நிலைல இருந்து வர்ற அரசியல் தலைவர்கள் பெரிய தியாகியா இருக்கணும்ன்னு எதிர் பார்க்க முடியாது. மீறி மக்களுக்கு சேவை மட்டுமே செய்யுறதை நோக்கமா வச்சிக்கிட்டு யாராவது அரசியலுக்கு வந்தாலும் அவங்களால தாக்கு பிடிக்க முடியாது. ஒரு கார்ப்பரேட் கம்பெனியிலேயே நேர்மையா இருக்கிறது கஷ்டமாகி போன காலத்துல எப்பிடி அரசியல்ல நேர்மையா இருக்க முடியும்?

இதையெல்லாம் மீறி இந்தியாவுக்கு ஒரு நல்ல தலைவர் கிடைப்பரான்னு யோசிச்சா மோடி மட்டும்தான் நினைவுக்கு வரார். நம்ம  நாட்ல இவரை மாதிரி  தொலைநோக்கு பார்வை கொண்ட, மக்களோட வளர்ச்சிக்காக சிந்திக்க கூடிய ஒரு தலைவர் கிடைக்கிறது ரொம்ப ரொம்ப  கஷ்டம். இவர் இங்கிலாந்து போய் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சவர் கிடையாது. மக்களோட மக்களா இருந்து வந்தவர். மக்களோட கஷ்டத்தை புரிஞ்சவர். பெரிய தேச பக்தர். இந்தியாவுக்கு என்ன தேவைன்னு அவருக்கு சரியா தெரியும். இவர் நிச்சயம் ஆட்சியை மக்களுக்காக நடத்துவாரே தவிர  தன்னோட சொந்த இலாபத்துக்காக நடத்த மாட்டார். ஏற்கனவே தன்னோட நிர்வாக திறமையை தேசத்துக்கு காட்டியும் இருக்கார்.  இதுதான் இவர் பக்கமா என்னை சாய வைக்குற விஷயம்.

ஆனா மோடியை பத்தி இப்பிடி ஒரே அடியா நல்லவிதமா சொல்லிட்டு போயிட முடியல. அரசியல்வாதியா அவருக்கு ஒரு சித்தாந்தம் இருக்கலாம். அவர் ஹிந்துத்துவவாதியா இருக்கலாம். ஆனா ஆட்சில இருக்கும்போது அவரோட முக்கிய கடமை மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. கலவரத்தப்போ அவர் அப்படிபட்ட ராஜதர்மத்தோடு நடக்கணும்ன்னு  வாஜ்பாயே சொன்னதுதான் உறுத்துது. ஒரு வெள்ளை துணில பட்ட மை  மாதிரி மோடியோட ஒட்டு மொத்த நல்ல பேருக்கும் களங்கமா இருக்குது அந்த கலவரம்.

அவரோட ஆட்சியில எல்லா எல்லா மக்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுதுன்னா அவருக்கு ஓட்டு போடுறதுல யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது. எந்த காரணத்தை கொண்டும் காங்கிரஸ்க்கு வோட்டு போட முடியாத சூழ்நிலைல இப்போதைக்கு தேசத்துக்கு இருக்குற ஒரே நம்பிக்கையும்  அவருதான். இருந்தாலும் இப்போதைக்கு மோடி மேல இருக்குற விமர்சனங்கள் மாதிரியே  மனசும் ரெண்டு பக்கமா சாஞ்சுகிட்டு ஒரு dilemmaலயே இருக்கு.  முடிஞ்சா நீங்க சொல்லிட்டு போங்க அவர் இந்தியாவை மீட்க வந்த மீட்பரா? இல்லை ஹிட்லரான்னு?


6 comments:

 1. நடப்பு ஆட்சியின் கொடூரங்கள் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான் அதனை பயன்படுத்திக்கொண்டு வாக்குகளாக மாற்றும் முயற்சியில் பாஜக் இறங்கியுள்ளது. அதில் ஒரு உத்திதான் நரேந்திர மோடி என்ற பெயரே தவிர இதனானெல்லாம் ஏதோ நாடு சுபிட்சமாகிவிடும் என்று நம்புவதைப் போன்ற அசட்டுத் தனம் வேறு எதுவும் இல்லை.

  சில பொருளாதார நிலைமகளை மாற்ற எந்த மோடி வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது என்பதே இன்றைய நிலவரம்!

  ReplyDelete
 2. இவை இரண்டும் இல்லாமல் மாற்று வேண்டும் என்பதே என் விருப்பம்

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலான மக்களின் விருப்பம் அதுதான். ஆனால் என்ன செய்ய? இப்போதைக்கு காங்கிரஸ், பிஜேபிக்கு மாற்று இல்லையே.

   Delete
 3. இந்தியாவை மீட்க வந்தவர்

  ReplyDelete
 4. நான் பல வருடங்களா குஜராத் ல் வசித்து வருகிறேன் .ஆனால் இப்போது சென்னைக்கு வந்துவிட்டேன் .மனதளவில் இன்னும் குஜராத் ல் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் .ஒரு மாதம் குஜராத்ல் இருந்து பாருங்கள் .உண்மை புரியும்.unique state in india

  ReplyDelete
 5. ஹிட்லர் மிக மோசமானவர் தான் ஆனால் தாய் நாட்டை நேசித்தவர் இன்று இருப்பவர்கள் மக்களை வஞ்சித்து நிலக்கரி முதல் விண்வெளி வரை பணம் கொய்து நம் தமிழ் இனம் அழிவதை வேடிக்கை பார்த்தவர்கள் . மறுபடியும் அவர்களுக்கு வாக்களிப்பது முடியாத செயல் . எனவே வேறு மாற்று இல்லாமல் மோடிக்கு ஆதரிக்கிறேன்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...