Thursday, May 2, 2013

பீட்சா போச்சே - தமிழனை பாடாய்படுத்தும் ஆங்கிலம்

"பூவே செம்பூவே உன் வாசம் வரும் " அப்பிடின்னு டிவில ராதாரவி பாடிட்டு இருந்தாரு. ஒரு வேளை இந்த பாட்டை ராதாரவி உண்மையாவே தன்னோட வாய்ஸ்ல பாடிட்டு இருந்தா எப்பிடி இருக்கும்னு யோசிச்சுகிட்டே சேனலை மாத்தினேன். விஜய் டிவில இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வேலை கிடைக்கிறது குதிரை கொம்பா இருக்குன்னு கோபிநாத் சொல்லிட்டு இருந்தார். அதுல பேசுனவங்க மாணவங்களுக்கு வேலை கிடைக்காம போறதுக்கு பல காரணங்கள் சொல்லிட்டு இருந்தாங்க. குறிப்பா ப்ராக்டிகல் அறிவு காலேஜ்ல கிடைக்கலன்னு பல பேரு சொன்னாங்க. ஆனா ஏனோ நம்ம மக்களோட அதீத ஆங்கில அறிவு பத்தி யாருமே சொல்லலை. சொந்த அனுபவத்துல சொல்றேன். தமிழ் நாட்ல உள்ள பெரும்பாலான மக்களுக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை ஆங்கிலம்தான். ஏனோ தெரியல  இந்த இங்கிலீஷ் கருமம் நம்ம ஆட்கள் ரொம்ப பேரு வாயில நுழையவே மாட்டேங்குது.

நான் எட்டாம் வகுப்பு படிக்கிறப்போ நடந்தது இது. இங்கிலீஷ் பரிட்சையில இங்கிலீஷ் பழமொழியை தமிழ்ல மொழி பெயர்க்க சொல்லி ஒரு கேள்வி. "UNION IS STRENGTH" இதுதான் கேட்டு இருந்த பழமொழி. "வெங்காயமே பலம்" அப்பிடின்னு நம்ம ஆளுங்க எழுதுனாங்க பாருங்க ஆன்சரு. வாத்தியாருங்க எல்லாம் அசந்து போய்ட்டாங்க.  "ஏன்டா! உங்களுக்கு ஆனியனுக்கும் யூனியனுக்குமா வித்தியாசம் தெரியாதுன்னு ஒரே பாராட்டுதான். இந்த மட்டுலதான் பள்ளிகூடத்துல இங்கிலீஷுக்கும் நமக்கும் உறவு  இருக்கு.


இன்ஜினியரிங் காலேஜ் போனப்புறம் பசங்களுக்கு வேற வழி  இல்ல. அடிக்கடி அதையும் இதையும் சொல்லி இங்கிலிஷ்ல பேச வைக்க பாப்பாங்க. அப்போ நம்ம பசங்க படுற கஷ்டம் இருக்கே. தமிழ்ல ஓலை பாயில நாய் மொண்ட மாதிரி பேசுனவங்களுக்கு அந்த நேரத்துல வாயில இருந்து காத்துதான் வரும். இன்னும் சில பேருக்கு ஏதோ ஃபர்ஸ்ட்  ரூமுக்குள்ள போன மாதிரி வேர்த்துபோய் உடம்பெல்லாம் நடுங்கும்.

இதுல இன்னும் சில பசங்க இருப்பாங்க. இவனுகளுக்கு இங்கிலீஷ் கொஞ்சம்  தெரிஞ்சு இருக்கும். இங்கிலிஷ்ல பேச சொன்னதும் மட மடன்னு பேசுவாங்க. ஆனா பேசுறதை வச்சு அவனுங்க நடந்ததை சொல்லுறாங்களா இல்ல நடக்கபோறதை சொல்லுறாங்களானு கண்டு பிடிக்கவே முடியாது.  பேசும்போது ஒவ்வொரு வார்த்தையா யோசிச்சு யோசிச்சு இழுத்து இழுத்து பேசுறவங்க இன்னொரு ரகம். இவனுங்க பேசி முடிக்கும்போது எதுல இருந்து பேச ஆரம்பிச்சாங்கன்னு அவனுகளுக்கே  மறந்து இருக்கும்.

இப்பிடி சின்ன சின்ன ஊருல இருந்து வந்தவங்களை இங்கிலீஷ் படுத்தற பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை. சத்தியமா சொல்றேங்க இன்னும் எனக்கு இங்கிலிஷ்ல இருக்குற 12 டென்சையும் எப்பிடி யூஸ் பண்றதுன்னு தெரியாது. எனக்கு மட்டும் இல்லை. எனக்கு கத்து குடுத்த வாத்தியார்களுக்கும் தெரியாது. இப்பிடி இருக்கும்போது எப்பிடி இன்டர்வியு போய் எங்க இருந்து வேலை வாங்குறது.

இப்பிடி இந்த  இங்கிலீஷாலயே நல்ல புத்திசாலிங்க கூட சரியான வேலை இல்லாம இருக்காங்க.  ஆனா இங்கிலீஷை மட்டுமே வச்சுக்கிட்டு நிறைய பேர் தங்களை புத்திசாலியா காமிச்சுக்கிட்டு நல்ல வேலைல இருக்காங்க. இந்த இங்கிலீஷ் ஏன் நம்ம பசங்களுக்கு வரவே மாட்டேங்குதுனு மட்டும் தெரியல. கடைசியா ஒன்னு மட்டும் அனுபவத்துல சொல்றேங்க. இங்கிலீஷ் மட்டும் கொஞ்சம் கத்துகிட்டா நம்ம ஆளுங்களை அடிச்சுக்க எவனாலயும் முடியாது. 

5 comments:

  1. பக்கத்து மாநிலங்களுக்கு அடிக்கடி சென்று வருவோர்,மற்ற மாநிலங்களில் குடியேறியிருப்போர் அம்மாநில மொழிகளை பேசுவதைப் போல் ஆங்கிலத்தை ஒரு மொழியாக நினைத்து பேச வேண்டும்.நாம் வேதமாக நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நான் வேலை பெறுவதற்கு ஆங்கிலம் ஒரு தடையாக இருக்கிறது என்றே கூறி இருக்கிறேன் நண்பரே. ஆங்கிலத்தை வேதம் போல் கற்க வேண்டும் என்று கூறவில்லை.

      Delete
  2. பின்னூட்டம் இடும் போது வரும் "Word verification" ஐ நீக்குங்க

    ReplyDelete
    Replies
    1. செய்து விட்டேன்

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...