சிலருக்கு
புரட்சியாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி புரட்சியாளர் ஆக எளிய
வழி ரஜினியை திட்டுவது. ரஜினியை திட்டுவதன் மூலம் கிடைக்கும் லாபம் என்னவென்றால் எளிதில் மக்களின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்ப
முடியும். ரஜினியை திட்டுபவர்கள் புத்திசாலிகள் என்று கூட சிலர் நம்பி
விடுவார்கள். இப்படி எளிய முறையில் புரட்சியாளர் ஆகும் வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கீழே உள்ளே வழிமுறைகளை பின்பற்றும் முன்
ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ரஜினியை வைத்து புரட்சியாளராக முயற்சி
செய்யும்போது கட்டாயமாக செய்தித்தாளோ, புத்தகங்களோ படிக்கக்
கூடாது. அப்படி செய்தால் சிந்திக்க தொடங்கி விடுவீர்கள். பின்னர் புரட்சியாளராக
மாற முடியாது. முடிந்தவரை facebook,whatsapp மூலம் மட்டுமே செய்திகளை தெரிந்து
கொள்ள வேண்டும். இதை மனதில் நிறுத்திக் கொண்டு வழிமுறைகளை படியுங்கள்.
Step 1:
facebook மூலம் மட்டும் நாட்டு நடப்பை கவனித்துக் கொண்டே இருங்கள். நாட்டில் ஏதேனும்
பிரச்சினை எழும்போது “ ரஜினி இதை பத்தி ஒன்னும் சொல்லலடா” என்று status போடவும்.
உண்மையிலேயே ரஜினி அதை பற்றி ஏதேனும் சொல்லி இருக்கிறாரா என்றெல்லாம் கவலைப் பட
தேவையில்லை. எல்லா பிரச்சினைக்கும் ரஜினி ஏன் கருத்து கூறவோ, போராடவோ வர வேண்டும் என்று மூளையை பயன்படுத்தி யோசிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் மேலே படிக்காதீர்கள்.
Step 2:
ரஜினி அந்த பிரச்சினை பற்றி கருத்து கூறியது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுவிட்டால்
கவலைப்பட வேண்டாம். “இப்போ இவரை யாரு கருத்து சொல்ல கூப்பிட்டா?” என்று status
தட்டி விடுங்கள். ரஜினிக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் share செய்து விடுங்கள். அதனுடன் நானும்
முன்னாள் ரஜினி ரசிகனே என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.
Step 3:
உங்களை போன்ற புரட்சியாளர்களுக்கு
எப்போதும் முதிர்ச்சி அடையப் போவதில்லை என்பதால் ரஜினியை கிழவன் என்று
குறிப்பிடவும். உங்களுக்கோ, உங்கள் பரம்பரைக்கோ முடி உதிரும் பிரச்சினை இல்லை என்று உறுதியாக
தெரிந்தால் அவரை சொட்டை என்றும் குறிப்பிடலாம்.
Step 4:
முந்தைய நிலையை கடந்த பின் ரஜினி ரசிகர்கள் ரஜினி, அந்த
பிரச்சினையில் எடுத்த நிலைப்பாட்டை பற்றி பேசுவார்கள். அப்போது நீங்கள் “ரஜினி
சின்ன பொண்ணு கூட டூயட் பாடுறாருடா” என்று சம்பந்தமில்லாமல் உளற வேண்டும்.
Step 5:
அடுத்து ரஜினி ரசிகர்கள், ரஜினி மக்களுக்கு
செய்யும் உதவிகளை பற்றி பேசுவார்கள். அப்போது “ரஜினி கர்நாடகாடா” என்று எதிர்
தாக்குதல் புரியலாம். அடிக்க மாட்டார் என்று உறுதியாக தெரிந்தால் அந்த ரஜினி
ரசிகரையும் திட்டலாம்.
Step 6:
ரஜினியின் அடுத்த படத்தை tamilrockersல்
மட்டுமே பார்க்கப் போகிறேன் என்று status போட வேண்டும். அவ்வளவு ரோசக்காரன் ரஜினி படம்
பார்க்காம இருக்கலாமே என்று யாரேனும் கேட்டுவிட்டால் “ரஜினி தமிழ்நாட்டுக்கு
ஒண்ணுமே செய்யலடா” எனலாம்.
step 7:
ரஜினி படம் வெளியாகும் நேரத்தில் “ரஜினிக்கு
நடிக்கவே தெரியாதுடா” என்று கை நோக status போடுங்கள். “நடிகன்னா கமல்தான்” எனலாம்.
அல்லது விஜய், அஜித் என்று தேவைக்கேற்ப பேரை போட்டு கொள்ளலாம்.
Step 8:
ரஜினி படம் வெளி வந்த முதல் இரண்டு
நாட்களுக்குள் தியேட்டர் சென்று பார்த்து விடவும். படம் பார்க்க செல்லும் முன் தியேட்டர்
வாசலில் ஃ செல்பி
எடுத்துக் கொள்ள வேண்டும். படம் எப்படி இருந்தாலும் படம் முடிந்து வெளியே வரும்போது
“படம் குப்பைடா. ரஜினி அவ்வளவுதான்டா ” என்று கூவிக் கொண்டே வர வேண்டும்.
Step 9:
படம் 100 நாட்கள் ஓடினாலும் சரி, 150 நாட்கள் ஓடினாலும் சரி. ஒரு நாளும்
கூவுவதை நிறுத்த வேண்டாம். இந்த நிலையில் உங்களை யாரும் அதிகம் கண்டுகொள்ள
மாட்டார்கள். அதை பற்றி கவலைப்பட தேவையில்லை. உங்கள் வயிற்றெரிச்சல் தீரும்வரை
படத்தையும், ரஜினியையும் கழுவி ஊற்றவும்.
Step 10:
முதல் நிலைக்கு
சென்று புரட்சி போராட்டத்தை தொடரவும்.
இப்படி மேலே
குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் ஒரு கோடி பேர் போராளிகளாக உள்ளனர்.
அவர்களுடன் நீங்களும் ஒரு கோடியே ஒன்னாவது போராளியாக இணைய வாழ்த்துக்கள்.
well said
ReplyDelete