"என்ன தலைப்புடா இது?" ரஜினிக்கும் டெண்டுல்கருக்கும் என்ன சம்பந்தம் என்று நினைகிறீர்களா? இருக்கிறது. இந்த இரு மராட்டியர்களும் பாதி தேசத்தை கட்டி போட்டவர்கள், என்னை மிகவும் கவர்ந்தவர்கள் என்பதை தவிர்த்து இன்ன பல விசயங்களும் உள்ளன. இவர்கள் வாழ்கையிலிருந்து எடுத்து கொள்ளவும் எவ்வளவோ உள்ளன.
கடின உழைப்பு:
இவர்கள் இருவரின் திறமை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. அனால் வெற்றி பெற திறமை மட்டும் போதுமா? நிச்சயம் இல்லை. ரஜினியை விட திறமையான திறமையான நடிகர்கள் உள்ளனர். வினோத் காம்ப்ளி தன்னை விட திறமையான ஆட்டக்காரர் என்று டெண்டுல்கரே கூறி உள்ளார். ஆனால் திறமையாலர்களால் இவர்கள் அடைந்த வெற்றியில் பாதியை கூட அடைய முடியவில்லையே. இவர்களின் நெருங்க முடியாத சாதனைகளுக்கு காரணம் என்ன? இவர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வுமே. டெண்டுல்கர் உலகின் சிறந்த ஆட்டக்காரர் என்று அனைவரும் ஓப்பு கொண்ட பின்னும் அதிக நேரம் பயிற்சி எடுப்பவர். இந்திய சூப்பர் ஸ்டார் என்று ஆனா பின்னும் ரஜினி எந்திரனுக்காக பட்ட கஷ்டம் என்ன வென்று அறிவோம். தம் வேலையின் மேல் இவர்களுக்கு இருக்கும் அதீத ஈடுபாடு இவர்களை இயக்குகிறது.
தோல்வியிலிருந்து மீள்தல்:
இவர்கள் அடைந்த வெற்றி மட்டுமே நமக்கு நினைவில் உள்ளது. ஆனால் இவர்கள் அடைந்த தோல்விகளும் ஏராளம். ரஜினிக்கு சந்திரமுகியும் டெண்டுல்கருக்கு 2003 நியூசிலந்து தொடருக்கு பின்னான உலக கோப்பை தொடரும் ஒரு உதாரணம். இவர்களின் சிறிய தோல்விகளும் பெரிது படுத்த படுகிறது. இவர்கள் தோல்வி அடைந்தால் கொண்டாட ஒரு கூட்டமே உள்ளது. இருந்த போதிலும் இவர்கள் தோல்வியிலிருந்து மீண்டு வந்த விதம் அலாதியானது. தங்கள் தகுதி திறமை மேல் இவர்களுக்கு இருந்த அதீத நம்பிக்கையே இதற்கு காரணம்.
- தொடரும்
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
Wonderful !
ReplyDeleteThanks KK. Next part is dedicated to you.
DeleteSuper
ReplyDeleteThanks Siva
Deletesuper sir..,
ReplyDeleteThanks Satheesh
Deleteபணிவு, பயபக்தி, எல்லாம் தெரிந்து கொண்டாலும், கற்றுக்கொள்ளும் ஆர்வம, பிறர் சொல்லும் ஆலோசனையை உதாசினபடுத்தாமை,வாழ்கை அனுபவம் தரும் பாடத்தை அறிந்து திருத்தி கொள்ளுதல், இவை இருத்தலே வாழ்க்கையில் அமைதியும் உயர்வும் வரும்
ReplyDeleteஉண்மைதான் நண்பரே.. இவற்றை பற்றியே அடுத்த பகுதியில் எழுத இருந்தேன்.
Delete