Wednesday, August 7, 2013

தலைவ்வ்வா

ரு திரைப்படத்துக்கு பிரச்சனைகள் வருவதும், படத்தை வெளிவிட முடியாமல் போவதும் புதிதல்ல. 'சூப்பர் ஸ்டார்' முதல் 'சோலார் ஸ்டார்' வரை அனைவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்தே இருப்பார்கள். ஆனால் இப்போது தலைவாவுக்கு வந்திருக்கும் பிரச்சினை மிக விசித்திரமானது. ஆட்சியாளர்களே ஒரு படத்தை எதிர்க்கிறார்கள் என கூறப்படுகிறது. இத்தனைக்கும் அவர்களுக்கு படத்தின் கதையை பற்றியோ, காட்சி அமைப்புகளை பற்றியோ ஒன்றும் தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது படத்தின் தலைப்பு மட்டும்தான்.

தேசம் கெட்டு விட்டது , கருத்து சுதந்திரம்  பறி போய் விட்டது என்றெல்லாம் பேச வேண்டாம்.   இந்த படத்தை அவர்கள் எதிர்ப்பது எத்தனை அர்த்தமற்றது என்று பார்க்கலாம். விஜய் ஒரு அரசியல் படத்தில் நடித்தால் மக்கள் அவரை உடனே முதல்வராக்கி விடுவார்கள் என்று நினைக்கிறார்களா?  இன்றைய நிலைமையில் விஜய் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்றால் ஒரு வேளை ஓட்டுகளை சற்று பிரிக்கலாம்.  ஆனால் ஒன்றிரண்டு தொகுதிகளை கை பற்றினாலே அது மிகப் பெரிய விஷயம். அதற்கு காரணமாக நான் கருதுபவை.


1. விஜய் நடிக்க வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால்  ஒரு முறை கூட அவர் மேடைகளில் திணறாமல் சிறப்பாக பேசியதாக நினைவில்லை. பெரும்பாலும் பேசுவதை தவிர்த்து ஏதேனும் ஒரு பாடலை பாடிவிட்டு சென்றுவிடுவார் . தமிழ்நாட்டிலோ பேசி பேசி ஆட்சியை பிடித்தவர்கள்தான் அதிகம். ஒரு வேளை விஜய் அரசியலுக்கு வந்து அரசியல் மேடைகளில் 'தொட்டபெட்ட ரோட்டு மேல' என பாடினால் மக்கள் எந்த நம்பிக்கையில் அவருக்கு ஓட்டு அளிப்பார்கள்?

2. விஜய் ரசிகர்களை தவிர்த்து மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு எப்போதுமே விஜய் மேல் ஒரு கொலை வெறி உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் விஜயை கலாய்த்து அவரை கிட்டத்தட்ட ஒரு காமெடியன் நிலைக்கு தள்ளினார்கள். இவர்கள் எந்த சூழ்நிலையிலும் விஜய்க்கு வாக்கு அளிக்க போவதில்லை.

3. தமிழக மக்கள் நடிகர்களை முதல்வராக்கி பார்க்கும் மன நிலையை எல்லாம் எப்போதே கடந்து விட்டனர். கருப்பு எம்.ஜி.ஆர், பச்சை எம்.ஜி.ஆர் என்று சொல்லி எல்லாம் முதல்வராக முடியாது. 

4. ஒரு வேளை மக்கள்  விஜயை நம்பி, ஒரு மாற்று சக்தியாக அவரை ஆட்சியில் அமர்த்த எண்ணினாலும் விஜய் ஆரம்பிக்கபோகும் கட்சியின் முக்கிய தலைவர்களான இருக்க போகும் 'கில்லி' பாண்டி, 'குருவி'  வாசு போன்றவர்களின் செயல்பாடுகள் அவர்களை விஜயை தேர்ந்தெடுக்க விடாமல் செய்து விடும். 

5. ஒரு பேச்சுக்கு விஜய் புதிய கட்சி ஆரம்பிக்காமல்  ஜெயலலிதா, கருணாநிதி  காலத்துக்குப் பின் அதிமுகவிலேயோ, திமுகவிலேயோ  இணைந்து அதன் தலைவராக முயல்கிறார் என்று வைத்து கொள்வோம். அந்த நிலை வந்தால் திமுகவின் குடும்ப அரசியலில் சிக்கி சின்னாபின்னமாகி போவார். 

சரி, மேலே கூறிய அனைத்து காரணங்களையும் மீறி, விஜய் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளதா? இருக்கிறது. என்னதான் நம் மக்கள் புத்திசாலிகளாக இருந்தாலும் ஒருவர் மேல் பரிதாப்பட்டு விட்டால் தங்கள்  புத்திசாலித்தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விடுவார்கள். இப்போது 'தலைவா' படத்துக்கு வந்திருக்கும் எதிர்ப்புகள் விஜய் மேல் அந்த பரிதாபத்தையே உருவாக்கபோகிறது  . இந்த படம் வெளிவரும்போது 'விஸ்வரூபம்' போல மிக பெரிய வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. 

இது மட்டுமில்லாமல் 'மாணவர் புரட்சி படை' என்ற அமைப்பு இந்த படத்தை எதிர்ப்பது போல ஒரு செய்தியை வேறு உலவ விட்டுள்ளனர்.  இந்த அமைப்பின் பெயரை பார்க்கும்போது விஜய் ஏதோ ஒரு புதிய அரசியல்  சித்தாந்தத்தை உருவாக்கிவிட்ட போராளி போலவும் அதனால் அந்த அமைப்பு  அவரை எதிர்ப்பது போலவும் தெரிகிறது. பிற்காலத்தில் விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு இது உதவி செய்யலாம்.

ஆக காரணமே இல்லாமல் ஒரு படத்தை எதிர்த்து படத்துக்கும், விஜய்க்கும் ஒரு விளம்பரம் தேடி தந்துள்ளனர். அடுத்த சில நாட்களில் நடக்கப் போகும் நிகழ்வுகள் விஜயின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது. அது அவரை அரசியலை நோக்கி நகர்த்த போகிறதா அல்லது அரசியலை விட்டு தூரமாக நகர்த்த போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


8 comments:

  1. நீங்களே வெடிகுண்டு புரளி ஆழ வச்சி கேளப்பிவிடுங்க நீங்களே பாதுகாப்பு கேளுங்க -ஒரு வெளம்பரம்

    ReplyDelete
  2. நண்பரே மாணவர் புரட்சிபடை என்னும் பெயரில் வந்த மிரட்டல், விஜய் அவர்களை எதிர்த்து அல்ல. படத்தை வெளியிடும் வேந்தர் மூவிஸ் அதாவது எஸ்‌ஆர்‌எம் கல்வி நிறுவனத்தை நடத்தும் பச்சமுத்து அவர்களை எதிர்த்து.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறுவது சரிதான். இருந்த போதும் சமீபத்தில் வேந்தர் மூவிஸ் எத்தனையோ படங்களை வெளியிட்டு இருந்தாலும் இந்த படத்துக்கு மட்டும் வந்திருக்கும் எதிர்ப்பு இதை விஜய்க்கு எதிரான எதிர்ப்பாகவே கருத செய்யும். அதெல்லாம் இருக்கட்டும். நான் உங்கள் எழுத்துகளுக்கு ரசிகன். நீங்கள் ஏன் இப்போதேல்லாம் அதிகம் எழுதுவதில்லை?

      Delete
    2. சமீபகாலமாக குடும்பஸ்தன் மற்றும் தந்தை என்று இரு பொறுப்புகள். ஆகவே கொஞ்சம் இடைவெளி. கண்டிப்பாக கூடிய விரைவில் எழுதுவேன். நன்றி நண்பரே

      Delete
    3. கூடிய விரைவில் எழுதவேண்டும். சொந்த வேலைகள் அதிகம். நன்றி நண்பரே

      Delete
  3. //விஜய் நடிக்க வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் ஒரு முறை கூட அவர் மேடைகளில் திணறாமல் சிறப்பாக பேசியதாக நினைவில்லை.// உண்மை உண்மை ஆனால் ஆசை யாரை விட்டது ?

    ReplyDelete
  4. what is the value of a censor certificate? How many parties and nethaas will view and take decision about CUTS[?] Engeyo poyitome??????

    ReplyDelete
  5. idhe vijay paari vendharai POORI VENDHAR ENDRU KALAAITHAARE ADHU EPPADI??? ELLAAM
    K A A S U! M O N E Y! T HU T T U! d H U K K A A N I! P A I S A A ! d A B B U!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...