பரிந்துரை : ஒரு முறை பார்க்கலாம்.
காமெடி-த்ரில்லர் என எதாவது சினிமா வகை உண்டா ? அதை இந்த படத்தில் முயற்சி செய்து இருக்கிறார்கள் என தோன்றுகிறது . குறிப்பாக கடைசி காட்சியில் தியேட்டரே சிரிக்கிறது.
ஷேர்-ஆட்டோ ஓட்டும் நம் கதாநாயகன் அஞ்சலியை காதலிக்கிறார். அது போக மீத நேரத்தில் முகம் தெரியாதவர்களுக்கு எல்லாம் உதவி செய்கிறார். அதனால் அவரை கொல்ல சிலர் முயல்கின்றனர். அதலிருந்து எப்படி தப்பி வருகிறார் என்பதை த்ரில்லர் போல சொல்ல முயன்று இருக்கின்றனர். ஆனால் வலிமையான காரணமோ, காட்சிகளோ இன்றி காமெடி படமோ என்று சந்தேகம் வருகிறது.
ஒருவனை கொல்ல ஏன் எல்லாரும் முயற்சி செய்கின்றனர் என்பதாக ஆரம்பித்து படம் நன்றாகவே போகின்றது. அழகான காட்சிகள், சின்ன சின்ன காமெடிகள், சிறப்பான வசனங்கள் , அஞ்சலியின் நடிப்பு என எல்லாமே படத்திற்கு உதவி இருக்கிறது. ஆனால் நாயகனை கொலை செய்ய வருபவர்கள் சொல்லும் காரணம் ஒன்று கூட நம்பும்படி இல்லை. படத்தில் அஞ்சலியே இந்த காரணங்கள் எதையும் நம்பவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள். நடுத்தெருவில் கழுத்தில் கத்தி வைத்து பணம் பிடுங்குவது, கொலை செய்யும் திட்டத்தை டீ கடை முன் வைத்து விவாதிப்பது போன்ற காட்சிகள் எல்லாம் ஓவர். குறிப்பாக கடைசி காட்சியில் இயக்குனரின் புத்திசாலித்தனத்தை பாராட்ட வார்த்தையே இல்லை. கதாநாயகனை புத்திசாலியாக காட்ட முயன்று கோமாளியாக காட்டி இருக்கிறார்.
ஆனால் படம் குப்பை என்றல்லாம் சொல்ல முடியாது. நிச்சயம் பிழைத்து விடும். இயக்குனர் இப்போதைக்கு ஜஸ்ட் பாஸ்தான் ஆகி இருக்கிறார். கதைக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் ஒரு அதிரடி திரில்லர் உருவாக்கி இருக்கலாம். அடுத்த படத்தில் இன்னும் நன்றாக செய்வார் என நம்புவோம்.
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
No comments:
Post a Comment