நாட்ல நடக்குற போராட்டங்கள பாக்கும்போது சந்தோசம்தான். ஈழ தமிழர்களுக்கு நல்லது நடக்கும்னு தோணுது. ஆனா தனி தமிழ்நாடு அப்பிடின்னு சிலர் உளர்றதை பாக்குறப்போ எரிச்சலா வருது. இவங்க என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறாங்களானு புரியல . அரசாங்கம் இவங்களை ஆரம்பத்திலேயே இரும்பு கரம் கொண்டு அடக்கணும். இல்லாட்டி எல்லாமே தப்பா போக சான்ஸ் இருக்கு.
விஜய்க்கு சரியா எக்ஸ்பிரசன் காட்ட வராதுன்னு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா பிச்சு உதறிட்டார். அப்பிடியே கொஞ்சம் அந்த மூஞ்சிய பாருங்க. கெக்கே பிக்கேன்னு உங்களுக்கு சிரிப்பு வரல. சரியான டைரக்டர் மட்டும் கெடச்சா நம்ம அண்ணன் ஆஸ்கார் வாங்குற நாள் ரொம்ப தூரத்துல இல்ல.
சிலரை நெனச்சா மட்டும்தான் கடவுள் எப்படி இவங்களுக்கு இவ்வளவு அறிவை கொடுத்தார்னு ஆச்சரியமா இருக்கும். அப்படி ஒருத்தர் இளையராஜா. அவரோட ஒவ்வொரு பாட்டையும் கேக்கும்போது பிரமிப்பா இருக்கு. எங்க எந்த மாதிரி சத்தம் கொடுத்தா செட் ஆகும்;எப்படி மெட்டு போட்டா கேக்க இனிமையா இருக்கும் இது மாதிரி எல்லாமே அவருக்கு பிறவியிலேயே வந்து இருக்கு. கிட்டத்தட்ட அவரு கடவுள் நமக்கு கொடுத்த கிப்ட். இது ரொம்ப ஓவர்னு சொல்றவங்க "கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே" பாட்டு டவுன்லோட் செஞ்சு அமைதியான இடத்தில உக்காந்து கவனமா கேளுங்க. நான் சொல்றது சரின்னு புரியும்.
தமிழ்நாட்ல பிறந்தததுக்கு நாம பெருமை பட வேண்டியதுக்கு முக்கியமான காரணம் நம்ம இலக்கியங்கள். ஆனா அது இன்னும் நம்மளுக்கு சரியா புரியல. அந்த காலத்துல நம்ம கனியன் பூங்குன்றனார் எப்படியெல்லாம் சிந்திச்சு பாட்டு எழுதி இருக்கார் பாருங்க. "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!" அப்படின்னு எல்லா ஊரையும் சொந்த ஊரு ஆக்கி எல்லாரையும் நம்ம சொந்தம் ஆக்கிட்டார். இப்படி யோசிக்க எவ்வளவு பரந்த சிந்தனை வேணும்? சாலமன் பாப்பையா சொன்ன மாதிரி சங்க இலக்கியம் படிங்கயா. இளமையா இருக்கலாம்.
முடிஞ்சா கமெண்ட் போட்டுட்டு போங்க.
No comments:
Post a Comment