எட்டு வருசம் முன்னாடி வரைக்கும் சன் டிவியோட பொற்காலம் அப்படின்னு சொல்லலாம். சன் டிவில என்ன நிகழ்ச்சி போட்டாலும் மக்கள் வேற வழி இல்லாம பாத்து தீத்தாங்க. அது ராதிகா ஆன்ட்டி ஆம்பளைங்களை எல்லாம் அறைஞ்சு தன்னம்பிக்கை பெண்ணா வலம் வந்த சீரியலா இருந்தாலும் சரி. இல்ல கால் மேல கால் போட்டுகிட்டு சினிமாக்கு எல்லாம் நம்பர் சொன்ன டாப் 10 மூவிஸா இருந்தாலும் சரி. அவங்க கொடுத்ததெல்லாம் ஹிட்டுதான்.
அவங்களும் சந்தோசமா ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மெகா சீரியல் காமிச்சு போட்டியே இல்லாம நம்பர் ஓன்னா இருந்தாங்க. லைவ் ப்ரோக்ராம்ல பாட்டு போடற காலம் வந்த அப்புறமும் விடாம உமாவை வச்சு உங்கள் சாய்ஸ் நடத்திகிட்டு இருந்தாங்கனா பாத்துகங்களேன். அம்சமா டிவிக்கு வந்த உமா, ஆன்ட்டி ஆன அப்புறமும் அந்த நிகழ்ச்சியை நடத்தி சாதனை படைச்சாங்க . நல்லா இல்லாட்டியும் மக்கள் வேற வழி இல்லாம அவங்க அரைச்ச மாவுலேயே இட்லி சுட்டு சாப்பிட்டு இருந்தாங்க
இப்பிடி போயிட்டு இருந்தப்போ விஜய் டிவி, ஸ்டார் விஜயா மாறிச்சு. மாறினவங்க புதுசு புதுசா யோசிச்சு நிகழ்ச்சி செய்ய ஆரம்பிச்சாங்க. ரியாலிட்டி ஷோனு ஆரம்பிச்சு நிகழ்ச்சில வர்ற எல்லாரையும் அழ விட்டும், சண்டை போட விட்டும் மக்களை கவர் பண்ண ஆரம்பிச்சாங்க மக்களும் கொஞ்சம் கொஞ்சமா விஜய் டிவி பக்கம் பார்வையை திருப்புனாங்க. ஆரம்பத்துல சன் டிவி அதை பெருசா எடுத்துகிட்ட மாதிரி தெரியல. "கலக்க போவது யாரு" மாதிரி சில நிகழ்ச்சிகளை மட்டும் விஜய் டிவி கிட்ட இருந்து காப்பி அடிச்சுகிட்டாங்க . ஆனா புதுசா முளைச்ச கலைஞர் டிவி அப்படியே விஜய் டிவியை காப்பி அடிச்சது. அது மட்டும் இல்லாம சன் டிவி ல இருந்த ஆளுங்களை வேற தன் பக்கம் இழுத்திகிச்சு. சன் டிவிக்கு தலை வலி ஆரம்பிச்சு.
இபோ சன் டிவி எதாவது புதுசா செய்ய வேண்டிய கட்டாயம். அவங்களும் ட்ரை பண்ணாங்க. ஆனாலும் பெருசா ஏதும் கிளிக் ஆகல. காப்பி அடிச்சு செஞ்ச நிகழ்ச்சிகளும் செட் ஆகல. இருந்தாலும் அவங்க ட்ரை பண்றதை விடல. ஆனா இப்போ கொஞ்ச நாளா அவங்களுக்கு ஒரு நிகழ்ச்சி திருப்தியான நிகழ்ச்சி கிடைச்சு இருக்கு. அதான் சுட்டி குட்டீஸ். முன்னாடி சன் டிவில "மலரும் மொட்டும்" அப்படின்னு ஒரு நிகழ்ச்சி வரும். பிள்ளைங்க வந்து அமைதியா பாட்டு பாடிட்டு போகும். கேக்குற கேள்விக்கு பதில் சொல்லும். பொதுவா இந்த மாதிரி சொல்லி குடுத்ததை அப்படியே செய்யுறது போர் அடிக்கும் . அதுக்கு பதிலா அந்த குழந்தைங்களயே சுதந்திரமா பேச விட்டா என்ன ஆகும் ? அதுதான் இந்த நிகழ்ச்சி.
குழந்தைங்களை வச்சு ஒரு டாக் ஷோ நடத்துறது எல்லாராலும் செய்ய முடியாத ஒரு விஷயம். அதை இமான் அண்ணாச்சி அற்புதமா செய்றார்.குழந்தைங்க ஒரு விசயத்தை எப்படி புரிஞ்சு வச்சு இருக்குனு அவங்க கிட்ட கேள்வி கேட்டு தெரிஞ்சுகிறதுதான் நிகழ்ச்சியோட ஐடியா. கூடவே அவங்க அப்பா, அம்மா சண்டை குடும்ப விஷயம் எல்லாத்தையும் அவங்க பார்வைல தெரிஞ்சுகிறது காமெடியா இருக்கு. அப்படியே சமயத்துல அவங்க பேசுற பேச்சு பயமாவும், இந்த காலத்துல ஒரே பிள்ளை பெத்துகிட்டு அதுக்கும் ஓவரா செல்லம் கொடுத்து கெடுக்குறாங்களோன்னு கவலையாவும் இருக்கு. இதெல்லாம் யோசிக்காம பாத்தா நிச்சயம் 15 நிமிஷம் விழுந்து விழுந்து சிரிக்கலாம்.
நிகழ்ச்சில 2 குழந்தைங்க என்ன பேசிச்சின்னு கீழ கொடுத்து இருக்கேன் பாருங்க.
இமான் அண்ணாச்சி : உங்க அம்மா, அப்பாவை கொஞ்ச தூரம் தள்ளி இருக்கும்போது எப்படிமா கூப்பிடுவாங்க?
குழந்தை:ஏங்க! குறுக்கு வலிக்குது. வந்து தைலம் தேச்சு விடுங்களேன்.
இமான் அண்ணாச்சி : அம்மா, அப்பாவை அடிப்பாங்களா?
குழந்தை: கிட்சன்ல இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணா அடிச்சிடுவாங்க
நல்ல வேளை. எடிட் செஞ்சு போட்டதால குடும்ப மானம் தப்பிச்சது. இல்ல அந்த குழந்தை சொன்னது எல்லாம் போட்டு இருந்தா மானம் காத்துல பறந்து இருக்கும். இனிமேலாச்சும் குழந்தைங்க முன்னாடி ஒழுங்கா இருங்கப்பா.
நிகழ்ச்சி ஆரம்பிச்ச புதுசுல கொஞ்சமா விளம்பரம் இருந்துச்சு. ஆனா இப்போ 15 நிமிஷம் விளம்பரம்தான் ஓடுது. எப்படியோ சன் டிவிக்கு இந்த நிகழ்ச்சி ஹிட்டுதான். நிச்சயம் இந்த நிகழ்ச்சியை மிஸ் செஞ்சுடாதீங்க, இல்ல வருத்தபடுவீங்க
கருத்து சொல்லிட்டு போங்க
என் மனதில் இருந்ததை, படிக்க நேர்ந்தது. அருமையான பதிவு, நன்றி.
ReplyDeleteநன்றி நண்பரே.
Delete