உங்களோட ஒன்னாம் வகுப்பு ஆசிரியரை நினைவிருக்கிறதா? எத்தனை வருஷம் ஆனாலும் நீங்க அவங்களை மறந்து இருக்க மாட்டீங்க. எழுத்து அறிவித்தவன் இறைவன்னு சொன்னா நமக்கு எழுத படிக்க சொல்லி தந்த அவங்களும் இறைவன் மாதிரிதான். அதனாலதானோ என்னவோ அவங்க நம்ம நெனவுல எப்பவுமே இருக்காங்க. உண்மையிலேயே ஆசிரியர் தொழில் புனிதமானது. ஒரு ஆசிரியர் எல்லா மாணவர்களையும் தன் பிள்ளையா ஏத்துகிட்டு பாடம் எடுக்கிறவறா இருக்கணும். வேலைல இருந்து ரிடையர் ஆனப்புறமும், வழில சந்திக்கிற முன்னாள் மாணவர்கள் மரியாதை
கொடுத்து பேசும்போது ஏற்படுற சந்தோசம் இருக்கே, அதுதான் இந்த தொழில் தர்ற சந்தோசம். அதே நேரத்துல ஆசிரியர்கள் படுற கஷ்டமும் கொஞ்ச நஞ்சமில்லை.
ஆசிரியர்களுக்கும் நமக்குமான உறவு அழகானது. ஆரம்ப பள்ளியில இருந்து கல்லூரி காலம் வரை நாம விதவிதமான ஆசிரியர்களை சந்திக்கிறோம். வயசு ஆக ஆக ஆசிரியர்கள் பத்தின நம்ம பார்வையும் மாறிகிட்டே வந்து இருக்கும். ஆனாலும் இன்னைக்கும் நம்மோளோட ஆசிரியர்கள் பத்தி நினைக்கும்போது நமக்கு பலவிதமான நினைவுகள் வரும்.
பெரும்பாலும் நம்ம ஆரம்ப பள்ளி நாட்கள்ல பெண் ஆசிரியர்களையே பாத்து இருப்போம். காரணம் சின்ன பசங்களுக்கு பொறுமையா சொல்லி தர பெண் ஆசிரியர்களாலேயே முடியும். ஆரம்ப பள்ளி காலத்துல ஆசிரியர்களை நாம சாதாரண மனுசங்களா நினைச்சு இருக்க மாட்டோம் . அவங்க மேல ஒரு பயமும் , மரியாதையும் இருந்திருக்கும். சிலருக்கு அவங்க ஆசிரியர் ஒரு தேவதை மாதிரி கூட தெரிஞ்சு இருப்பாங்க. சிலருக்கு ஆசிரியர் மேல ஒரு பக்தி கூட இருந்து இருக்கும்.
தொடக்கப் பள்ளி முடிச்ச பின்னாடி நமக்கும், ஆசிரியர்களுக்குமான உறவு கொஞ்ச கொஞ்சமா வேற பரிமாணத்தை அடைஞ்சு இருக்கும். அவங்க மேல உள்ள மரியாதை சுத்தமா குறைஞ்சு, அவங்களுக்கு பட்ட பேரு வச்சு பேசுற அளவு போயிருக்கும். நமக்கு 15,16 வயசு ஆகும்போது அவங்க நமக்கு வில்லனா தெரிய ஆரம்பிச்சு இருப்பாங்க.
குறிப்பா 13 வயசை தாண்டுன பசங்களுக்கு பாடம் எடுக்கிற கட்டத்துல பெண் ஆசிரியர்கள் படுற பாடு கொஞ்ச நஞ்சமில்லை. தன்னை பத்தின பசங்களோட மோசமான கமெண்டை கேட்டும் கேட்காத மாதிரி இருந்துகிட்டும், பசங்க தன மேல படர விடுற பார்வைல இருந்து தன்னை காத்துகிட்டும் பாடம் எடுக்க வேண்டிய கஷ்டம் அவங்களுக்கு. இது மட்டும் இல்லாம, பசங்க பாத்ரூம்ல 'ஐ லவ் யூ டீச்சர்' னும், படம் வரைஞ்சு பாகங்களை குறிச்சு ஏற்படுத்துற அவமானங்களையும் பொறுத்துக்கணும்.காலேஜ் லெக்சரர்ஸ் நிலைமை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
ஆனா என்ன இருந்தாலும் சில ஆசிரியர்கள், நமக்கு ரொம்ப பிடிச்சவங்களா இருப்பாங்க. அவங்க உங்களுக்கு சோறு ஊட்டி விட்டு இருக்கலாம், உங்களை எல்லார் முன்னாடியும் பாராட்டுனவங்களா இருக்கலாம், நீங்க காதலிச்சவங்களா இருக்கலாம், உங்களுக்கு பீஸ் கட்டி உதவி செஞ்சவங்களா இருக்கலாம், நீங்க செஞ்ச தப்பை கண்டிச்சுட்டு மட்டும் விட்டவங்களா இருக்கலாம், உங்க தலைல குட்டி பாடத்தை புரிய வச்சு பாஸ் செய்ய வச்சவங்களா இருக்கலாம் .
நம்மளை ஸ்பெஸலா பீல் பண்ண வைக்கிற ஆசிரியர்களை நமக்கு சுலபமா பிடிச்சு போகுது. இதே மாதிரி ஒரு ஆசிரியர் எல்லா மாணவர்களையும் பீல் பண்ண வைக்கும்போது அவங்க மாணவர்களோட பேவரிட் ஆயிடறாங்க. இந்த மாதிரி ஆசிரியர்களை மாணவங்க விட்டு கொடுக்குறதே இல்ல. அவங்களுக்காக எதையும் செய்ய தயார் ஆயிடுறாங்க. இப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு மாணவங்ககிட்ட கிடைக்குற மரியாதையே தனி.
ஆனா இன்னைக்கு சூழ்நிலை "வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை" அப்படின்னு நெனைக்கிற மாதிரி மாறிட்டு வருது. வேற வேலை கிடைக்காம போனவங்கதான் பெரும்பாலும் ஆசிரியர் தொழிலுக்கு வராங்கா. டிவிலயும், இன்டர்நெட்லயும் எல்லாத்தையும் கத்துகிற மாணவர்களுக்கு மத்தியில இவங்க பாடு இன்னும் திண்டாட்டமா இருக்க போகுது. ஆனாலும் இவங்கள்லயும் மாணவர்களுக்கு பிடிச்ச ஆசிரியர்கள் உருவாகத்தான் போறாங்க. மாணவர்கள் மதிக்கிற ஆசிரியர்கள் உருவாகத்தான் போறாங்க . ஏன்னா நேத்துக்கும், இன்னைக்கும் மட்டும் இல்ல. என்னைக்குமே குரு தெய்வம்தான் . என்னைக்குமே மரியாதையான வேலை வாத்தியார் வேலைதான்.
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
No comments:
Post a Comment