17 வயதில் - ஒரு பாடம் விடாமல் டுயூசன் போய் +2 பரீட்சை எழுதுவதும்
18 வயதில் - நெடுஞ்சாலை ஓரம் எதாவது பொறியியல் கல்லூரியை தேடி கண்டு பிடித்து படிப்பதும் .
21 வயதில் - அதிலும் அரியர் மேல் அரியர் வைத்து கடைசி செமஸ்டரில் எல்லாவற்றையும் க்ளியர் செய்வதும்
23 வயதிற்குள் - கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கியோ அல்லது மாமா, மச்சான் என்று ரெபரன்ஸ் பிடித்தோ ஒரு சாப்ட்வேர் நிறுவனத்திலோ அல்லது அரசு நிறுவனத்திலோ வேலை வாங்குவதும்
25 வயதில் - விசாவிற்கு காத்திருந்து டாலரில் சம்பாதிக்க அமெரிக்கா செல்வதும்
27 வயதில் - அமெரிக்கா மாப்பிள்ளை அல்லது அரசாங்க மாப்பிள்ளை அந்தஸ்துடன் ஒரு பெண்ணை பிடித்து மணம் செய்வதும்
30 வயதில் - பிள்ளை பெற்று கொள்வதும்
32 வயதில் - ஒரு வீடு வாங்கி வாழ்கையில் செட்டில் ஆகி விட்டதாக நிம்மதி அடைவதும்
58 வயதில் - "நாங்கல்லாம் அந்த காலத்தில" என அலட்டி கொள்வதும்
மேற்கண்டவை மட்டுமே தமிழனின் உயர்ந்த பட்ச இலட்சியங்கள் என நினைத்து கொண்டிருந்தேன். நான் எண்ணிய அனைத்தையும் தவறு என புரிய வைத்து விட்டனர் இந்த மாணவர்கள். தமிழ்நாடு முழுவதும் கொழுந்து விட்டு எரியும் தீயை ஒரு வத்திகுச்சியாக இருந்து கொளுத்திய அவர்களுக்கு ஒரு சல்யூட்.
No comments:
Post a Comment