"வலிமையானவையே பிழைத்து கொள்ளும்" என்கிற தத்துவத்தை டார்வின் கொசுக்களை பார்த்துதான் உருவாகியிருப்பார் போலும். மனிதன் இதுவரை சிட்டுகுருவியிலிருந்து சுறா மீன் வரை மனிதன் எவ்வளவோ உயிரினங்களை அழித்து இருந்தும் அவனால் ஏன் கொசுக்களை மட்டும் அழிக்கமுடியவில்லை? கொசுக்களுக்கெல்லாம் குளிராதா? போன்ற சந்தேகங்கள் என்னை போலவே டார்வினுக்கும் வந்து இருக்க வேண்டும். இப்படி சாதாரண மனிதனையும் டார்வினுக்கு இணையாக சிந்திக்க வைத்த மின்தடை வாழ்க.
ஐபிஎல் வரப்போகுது. எல்லாரும் IPL பார்க்க ஆர்வமா இருப்பீங்க. ஆரம்பத்துல T-20 கிரிக்கெட்டை எதிர்த்த ஒரே கிரிக்கெட் போர்டான இந்தியன் கிரிக்கெட் போர்ட் இன்னைக்கு பணம் கிடைக்கும்குற ஒரே காரணத்துக்காக IPL நடத்திகிட்டு இருக்கு. ஒரு வேளை ஆஸ்திரேலியா கூட டெஸ்ட்ல இந்தியா தோத்து இருந்தா இந்த தடவை IPL கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும்.பார்க்கலாம் இந்த தடவை ஸ்கிரிப்ட் படி யாரு IPL ஜெயிக்க போறாங்கன்னு.
"இரண்டாம் உலகம் " எப்ப வரும்னு காத்துக்கிட்டு இருக்கேன். 7G பாத்ததில் இருந்து செல்வராகவன் படம்னாலே ஒரு ஆர்வம். அந்த படத்துக்கு அப்புறம் நான் செல்வராகவனை ஒரு ஜீனியஸா நினைக்க ஆரம்பிச்சேன் . 7G க்கு அப்புறம்வந்த படங்கள்ல கூட எல்லா படத்துலயும் ரசிக்கிற மாதிரியோ இல்ல அதிர வைக்கிற மாதிரியோ சீன்ஸ் நெறைய இருக்கும். இருந்தும் ஒட்டு மொத்த படமா பாக்கும்போது எந்த படமும் பெருசா கிளிக் ஆகல. அந்த குறைய இந்த படம் தீர்க்கும்னு நம்புவோம்.
காதல் தோல்வின்னா, பெண்கள் மேல ஆண்கள் வன்முறைய பிரயோகிக்க என்ன காரணம். நிச்சயம் ஆணாதிக்க மனோபாவம்தான். எப்பவும் பெண் தனக்கு அடங்கியே இருக்கணும்னு நெனைக்கிறான். ஒரு ஆண் என்னதான் பெண்களை தனக்கு சரிசமமா நெனைக்கிற மாதிரி காமிச்சுக்கிட்டாலும் அவன் உள்மனசுல பெண்களை தனக்கு கீழதான் வச்சி இருக்கான். ஒரு பெண்ணால புறக்கணிக்கப்படுறதையோ,அவமானப்படுத்தப்படுறதையோ அவனால தாங்கிக்கவே முடியாது. உண்மைய சொல்லணும்னா இன்னும் ஒரு பெண்ணுக்கு கீழ வேலை செய்றதையே இன்னும் ஆண் விரும்பலை. ஒரு பெண் தன்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டா அவன் ஈகோ பெரிய அளவில் பாதிக்கப்படுது. இது மாறணும்னா சின்ன வயசுல இருந்தே ஆணும் பெண்ணும் சமம்னு பசங்களுக்கு சொல்லி தர்றதுதான் ஒரே வழி.
பாரதியார் கவிதைகளை படிச்சா ஆச்சரியமா இருக்கு. அவர் சிந்தனைகளை பாக்கும்போது எப்படி ஒரு மனிதரால இப்படி எல்லாம் சிந்திக்க முடியும்னு பிரமிப்பா இருக்கு. அரசியல்ல ஆரம்பிச்சு ஆன்மிகம் வரை அவர் எழுதாத ஏரியாவே இல்ல. பாட்டுலயே மக்களுக்கு தைரியம் சொல்லி, ஞானம் கொடுத்து, அவங்களை நெனைச்சு கவலைப்பட்டு, புரட்சிகரமா சிந்திச்சு, இயற்கையை ரசிச்சு இப்படி சொல்லிகிட்டே போகலாம். வறுமை நிலையிலையும் அவருக்கு இருந்த ஆட்டிடுயூட் நம்ப முடியாதது .அவர் இன்னும் கொஞ்ச காலம் உயிரோட இருந்தா நமக்கு இன்னும் எவ்வளவோ கிடைச்சு இருக்கும். நேரம் கிடைச்சா அவர் கவிதைகளை படிச்சு பாருங்க. நீங்களே சொல்லுவீங்க அவர் ஒரு ஆச்சரியம்னு.
No comments:
Post a Comment